சூப்பர் 8 சுற்று அட்டவணை வெளியீடு: இந்தியா – ஜிம்பாப்வே பிப்.26-ல் சென்னையில் மோதல்

0
19

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற்று வருகிறது. 20 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள இந்​தத் தொடரின் லீக் ஆட்​டங்​கள் இறு​திக்​கட்​டத்தை எட்டி உள்ளது. லீக் ஆட்​டங்​களின் அடிப்​படை​யில் ‘ஏ’ பிரி​வில் இருந்து இந்​தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்​றுள்​ளது.

மற்​றொரு அணி​யாக பாகிஸ்​தான் அல்​லது அமெரிக்கா முன்​னேறக்​கூடும். ‘பி’ பிரி​வில் இருந்து இலங்​கை, ஜிம்பாப்வே அணி​களும், ‘சி’ பிரி​வில் இருந்து மேற்கு இந்தியத் தீவு​கள், இங்​கிலாந்து அணி​களும், ‘டி’ பிரி​வில் இருந்து தென் ஆப்​பிரிக்​கா, நியூஸிலாந்து அணி​களும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்​னேறி உள்​ளன.

சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறி உள்ள அணி​கள் 2 பிரிவுகளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இதில் குரூப் 1-ல் இந்தியா, தென் ஆப்​பிரிக்​கா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள், ஜிம்​பாப்வே அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. குரூப் 2-ல் இலங்​கை, இங்​கிலாந்​து, நியூஸிலாந்து அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. இந்த பிரி​வில் கடைசி அணி​யாக பாகிஸ்தான் அல்​லது அமெரிக்கா இடம் பெறும்.

சூப்​பர் 8 சுற்​றில் ஒவ்​வொரு பிரி​விலும் இடம் பெற்​றுள்ள அணி தனது பிரி​வில் உள்ள மற்ற அணி​களு​டன் தலா ஒரு முறை மோதும். புள்​ளி​கள் அடிப்​படை​யில் இரு பிரி​விலும் முதல் இரு இடங்​களை பிடிக்​கும் தலா 2 அணி​கள் அரை இறு​திக்கு முன்​னேறும்.

சூப்​பர் 8 சுற்​றில் குரூப் 1 ஆட்​டங்​கள் இந்​தி​யா​விலும், குரூப் 2 ஆட்​டங்​கள் இலங்​கை​யிலும் நடை​பெறுகின்​றன. சூப்​பர் 8 சுற்​றில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் வரும் 22-ம் தேதி தென் ஆப்​பிரிக்கா​வுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அகம​தா​பாத்​தில் நடை​பெறுகிறது.

இதைத் தொடர்ந்து சென்னை சேப்​பாக்​கத்​தில் 26-ம் தேதி நடை​பெறும் ஆட்​டத்​தில் ஜிம்​பாப்வே உடனும், மார்ச் 1-ம் தேதி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுட​னும் இந்​திய அணி பலப்​பரீட்சை நடத்த உள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here