சூரியகாந்தி பிரியத்தின் மலர்: இயக்குநர் ராம் மகிழ்ச்சி

0
196

‘பேரன்பு’ படத்துக்குப் பிறகு ‘ஏழு கடல் ஏழு மழை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ராம். அதைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள படம், ‘பறந்து போ’. இதில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் மேற்கொண்டுள்ளார். ஜூலை 4-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி ராம் கூறும்போது, “எல்லோரையும் போல் எனக்கும் சூரியகாந்தியை மிகவும் பிடிக்கும். நல்ல சூரியோதயத்தில் சூரியகாந்தி தோட்டத்தில் படம் பிடிக்கிற வாய்ப்பு என் முதல் படத்தில் எனக்குக் கிடைத்தது. சூரியகாந்தி, கட்டுக்கடங்காத இளம் பிரியத்தின் மலர் என்று எனக்குத் தோன்றியது.

அப்பாவின் பால்யமும் மகனின் பால்யமும் ஒன்று சேருகிற இடம்தான் இந்த சூரியகாந்தி பாடல். மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் பாடியிருக்கிறார். இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நேரத்தில் ஊரெல்லாம் சூரியகாந்தி பூத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here