பேய் கதை​யில் மீண்​டும் நடிக்கிறார் சுந்தர்​.சி

0
26

‘இருட்​டு’, ‘தலைநகரம் 2’ படங்​களுக்​குப் பிறகு சுந்தர்​.சி, இயக்​குநர் வி.இஸட் துரை மீண்​டும் இணை​யும் படத்தை மொமண்ட் என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் நிறு​வனம் சார்​பில் ஜி.ஏ.ஹரி​கிருஷ்ணன், துர்கா தேவி ஹரி​கிருஷ்ணன் தயாரிக்​கின்​றனர்.

‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்​ராஸ் மேட்​னி’, படங்​களுக்​குப் பிறகு இப்​படத்தை இந்​நிறு​வனம் தயாரிக்​கிறது. ‘பகவந்த் கேசரி’, ‘அகண்​டா’, ‘அகண்டா 2’ உள்​ளிட்ட தெலுங்கு படங்​களுக்கு ஒளிப்​ப​திவு செய்த சி.​ராம் பிர​சாத் ஒளிப்​ப​திவு செய்​கிறார்.

“தி​கில் நிறைந்த பேய் படமாக உரு​வாகும் இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்​கிறது. படத்​தின் மற்ற நடிகர்​கள், தொழில்​நுட்ப கலைஞர்​கள் குறித்த தகவல்​கள் விரை​வில் வெளி​யிடப்​படும்” என்று தயாரிப்பாளர் ஹரி​கிருஷ்ணன் தெரி​வித்​துள்​ளார்.

நடிகர் சுந்​தர்.சி, ‘அரண்​மனை’ வரிசை படங்​களில் ஏற்கெனவே பேய்க் கதை​யில் நடித்​திருக்​கிறார். இதில் மீண்டும் அதுபோன்ற கதையில் நடிக்க இருக்​கிறார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here