மாணவர்கள் தங்கள் அறிவையும் திறனையும் நாட்டுக்கு சேவை செய்ய அர்ப்பணிக்க வேண்டும்: சிபிஆர் அறிவுரை

0
17

ஜவஹர்​லால் நேரு பல்​கலைக்​கழகத்​தின் பட்டமளிப்பு விழா​வில் குடியரசுத் துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்​கேற்​றார்.

இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: ஜவஹர்​லால் நேரு பல்கலைக்​ கழகத்​தில் பட்​டம் பெற்​றுச் செல்​லும் மாணவர்​கள் தங்கள் அறிவை​யும், திறனை​யும், நாட்​டுக்கு சேவை செய்​வ​தில் அர்ப்​பணிக்க வேண்​டும். கல்வி என்​பது வெறும் பட்​டங்​களை வழங்குவதோடு நின்​று​வி​டா​மல், நற்​பண்​பு​களை வளர்ப்பதாகவும், அறிவை வலுப்​படுத்​து​வ​தாக​வும், ஒவ்​வொரு தனிமனிதனும் தன் சொந்​தக் காலில் நிற்​ப​தற்​குத் தேவை​யான தன்​னம்​பிக்​கை​யைத் தரு​வ​தாக​வும் அமைய வேண்​டும்.

கல்​வி, முறை​யான பயிற்சி மட்​டுமே, 2047-ல் வளர்ச்​சி​யடைந்த பாரதம் என்ற பிரதமர் மோடி​யின் தொலை நோக்கை இளைஞர்​கள் நனவாக்க உதவும். நாலந்​தா, தட்​சசீலம் போன்ற கல்வி மையங்​கள், உபநிடதங்​கள், பகவத் கீதை, கவுடில்​லியரின் அர்த்​த​ சாஸ்​திரம், திரு​வள்​ளுவரின் திருக்​குறள் போன்​றவை கற்​றலைச் சமூக மற்​றும் அறநெறி வாழ்​வின் மைய​மாக முன்​னிறுத்தி வந்துள்​ளன. உண்​மை​யான கல்வி என்​பது பட்​டம் பெறு​வது மட்டும் அல்ல, அது நம் நடத்​தையை​யும் குணத்​தை​யும் செம்மைப்படுத்​துகிறது.

விவாதம், ஆலோ​சனை, முரண்​பாடு​கள் ஆகியவை ஆரோக்கியமான ஜனநாயகத்​தின் முக்​கிய​மான அம்​சங்​கள். இவை இறு​தி​யில் ஒரு முடிவுக்கு வழி​வகுக்க வேண்​டும். முடிவெடுத்​தவுடன், அவற்றை அமல்​படுத்த அனை​வரும் ஒத்துழைக்க வேண்​டும். அப்​போது​தான் சிறந்த நிர்​வாகத்தை ஏற்படுத்த முடி​யும்.

உண்​மையை அறிவ​தில் நேர்​மை, சமத்​து​வ​மின்​மை​யைக் குறைக்க சமூக உள்​ளடக்​கம் மற்​றும் நாட்​டின் வளர்ச்​சிக்​கான தீவிர பங்​களிப்பு ஆகிய மூன்று முக்​கிய பொறுப்​பு​களை பட்டதாரி​கள் பின்​பற்ற வேண்​டும். மாணவர்​கள் எப்​போதும் பெற்றோரை​யும், ஆசிரியர்​களை​யும் மதிக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here