Home கன்னியாகுமரி செய்திகள் மாணவியிடம் பழகியதை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

மாணவியிடம் பழகியதை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

0

நாகர்கோவில்: பள்ளியில் மாணவியுடன் பழகியதை ஆசிரியர்கள் கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் கவின் ஜெனிஸ், 17, தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், ரத்னாபுரத்தைச் சேர்ந்த கவின் ஜெனிஸ், நாகர்கோவில் எஸ்.எல்.பி., அரசு மேல்நிலை பள்ளியில், பிளஸ் 1 படித்தார். இவர், தன்னுடன் படிக்கும் ஒரு மாணவியுடன் பழகி, புகைப்படங்கள் எடுத்தது தொடர்பாக, பிரச்னை ஏற்பட்டது. கவின் ஜெனிஸ், மற்றும் பெற்றோரை அழைத்து, ஆசிரியர்கள் கண்டித்தனர்.

இதில், மனம் உடைந்த கவின் ஜெனிஸ், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர். மாணவரின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி, பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். மேலும், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில், பெற்றோர் அனுமதியின்றி, கவின் ஜெனிஸ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version