கர்நாடகாவில் பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு: 56,432 பணி இடங்களை நிரப்பும் அரசாணை நிறுத்திவைப்பு

0
15

கர்​நாட​கா​வில் பட்​டியலில் உள்ள 101 சாதி​யினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க, எஸ்சி‍ – ஏ (மா​தி​கா, அருந்​த​தி​யர் உள்​ளிட்ட சாதி​கள்), எஸ்சி‍ – பி (ஹொலை​யா, ஆதி​தி​ரா​விடர் உள்​ளிட்ட சாதி​கள்), எஸ்சி – சி என 3 பிரிவு​களாக பிரித்​துள்​ளது.

அரசின் இந்த முடி​வால் எஸ்​சி- பி மற்​றும் எஸ்​சி- சி பிரி​வில் உள்ள 70-க்​கும் மேற்​பட்ட சாதி​யினர் கல்​வி, வேலை வாய்ப்​பில் கடும் பாதிப்​புக்கு ஆளாகி​யுள்​ளனர். இதனால் அந்த பிரி​வினர் கர்நாடகா​வில் பல்​வேறு போராட்​டங்​களில் தொடர்ச்​சி​யாக ஈடுபட்டுள்ளனர்.

இந்​நிலை​யில் கர்​நாடக அரசு காலி​யாக உள்ள 56,432 பணியிடங்களை நிரப்​புவதற்​கான அரசாணையை வெளி​யிட்​டது. இதற்கு எதி​ராக மைசூரு, குல்​பர்​கா, பீதர் உள்​ளிட்ட மாவட்டங்களில் எஸ்​சி- பி பிரிவை சேர்ந்​தவர்​கள் சாலை மறியல் போராட்​டம் நடத்​தி​ய​தால் அரசுக்கு நெருக்​கடி ஏற்​பட்​டது.

இது குறித்து ஆலோ​சிப்​ப​தற்​காக முதல்​வர் சித்​த​ராமையா அமைச்​சர​வையை கூட்​டி​னார். அப்​போது அமைச்​சர்​களிடையே உள் ஒதுக்​கீடு வழங்​கு​வ​தில் கருத்து முரண் ஏற்​பட்​டது. இதையடுத்​து, ஒரு​மித்த முடிவு எடுக்க முடி​யாமல் அமைச்​சரவை கூட்​டம் ஒத்தி வைக்​கப்​பட்​டது.

கர்​நாடக சட்​டத்​துறை அமைச்​சர் எச்​.கே.​பாட்​டீல் கூறுகை​யில், ”உள் ஒதுக்​கீடு தொடர்​பாக மீண்​டும் விவா​திக்க சிறப்பு கூட்டத்தை கூட்ட தீர்​மானிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​விவ​காரம் தொடர்​பான வழக்கு உயர்​ நீ​தி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. எனவே 56,432 பணி இடங்​களை நிரப்​புவதற்​​கான‌ அர​சாணையை அரசு நிறுத்​திவைக்​க முடி​வெடுத்​துள்​ளது” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here