‘கூஷ்கோர் பண்டட்’ தலைப்புக்கு வலுக்கும் எதிர்ப்பும், எச்சரிக்கையும்!

0
12

பிரபல இந்தி நடிகர் மனோஜ் பாஜ்​பாய் ‘த பேமிலி மேன்’ வெப் தொடர் மூலம் பிரபல​மா​னார். தமிழில் சூர்​யா​வின் ‘அஞ்​சான்’ படத்தில் வில்​ல​னாக நடித்​திருந்​தார். அவர் ஊழல் போலீஸ் அதிகாரி​யாக நடித்​துள்ள இந்​திப் படம் ‘கூஷ்கோர் பண்டட்.

இதை, ‘எ வெனஸ்​டே’, ‘ஸ்​பெஷல் 26’, ‘எம்​.எஸ்​.தோனி: த அன்​டோல்டு ஸ்டோரி’ உள்பட பல படங்​களை இயக்​கிய நீரஜ் பாண்டே தயாரித்​துள்​ளார். ரிதேஷ் ஷா இயக்கியுள்ளார். நெட்​பிளிக்ஸ் தளத்​தில் வெளி​யாக இருக்கும் இப்​படத்​தின் தலைப்​புக்​குப் பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர்.

பிராமணர்​களைக் குறிக்​கும் வார்த்​தை​யான பண்​டிட்​டின் பேச்​சு வழக்​கான ‘பண்​டட்’ உடன் ‘கூஷ்கோர்’ (ஊழல்) என்ற வார்த்​தையை இணைத்து பிராமண சமூகத்தை அவதூறு செய்​துள்​ள​தாக அவர்​கள் குற்​றம் சாட்டியுள்ளனர். இத்​திரைப்​படக் குழு​வினர் மீது வழக்​குப்​ப​திவு செய்ய உத்​தரப்​பிரதேச முதல்​வர் யோகி ஆதித்யநாத் உத்தர​விட்​டதை அடுத்​து, வழக்​குப்​ப​திவு செய்யப்பட்டுள்ளது.

இப்​படத்​தின் சர்ச்​சைக்​குரிய தலைப்​புக்கு எதி​ராக, வட மாநிலங்​களில் போராட்​டங்​கள் நடை​பெற்​றன. உத்தரபிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜில் தயாரிப்​பாளர் நீரஜ் பாண்​டே, இயக்​குநர் ரித்​தேஷ் ஷா, மனோஜ் பாஜ்பாய் ஆகியோரின் உரு​வப் பொம்​மை​கள் எரிக்கப்பட்டன.

இந்​நிலை​யில், மேற்​கிந்​தி​யத் திரைப்பட ஊழியர்​கள் கூட்டமைப்பு (FWICE), இப்​படத்​தின் தலைப்பு குறிப்​பிட்ட சமூகத்தை இழி​வுபடுத்தும் விதத்​தில் இருக்​கிறது என்​றும் அத்​தலைப்பை நீக்க வேண்​டும் என்​றும் படக்​குழு​வைக் கேட்​டுக் கொண்​டுள்​ளது.

ஒவ்​வொரு தொழிலும் மரி​யாதை மற்​றும் கண்ணியத்துக்குத் தகு​தி​யானது. திரைப்​படத் துறை, கருத்​துச் சுதந்திரத்துக்​கான ஓர் ஊடக​மாக இருப்​ப​தைத் தவிர, சமூகப் பொறுப்​பை​யும் கொண்​டுள்​ளது. அதனால் அத்​தலைப்பை உடனடி​யாக நீக்க வேண்​டும். இல்லை என்றால் தொழில்ரீதி​யான ஒத்​துழைப்பை வழங்க மாட்டோம்​ என்றும்​ எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here