கன்னியாகுமரி மாவட்டம் விளவகோடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பட்நேற்று (செப்.,30) குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: -.விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட மருதங்கோடு பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை செப்டம்பர் மாதம் 8-ம் தேதி உடைக்கப்பட்டது. அந்த சிலை உடைத்தவர்களை கைது செய்ய புகார் அளிக்கப்பட்டது.
செப்டம்பர் 17ஆம் தேதி வரை சம்மந்தபட்டவர்களை கைது செய்ததால் அன்று மாலை கழுவன் திட்டை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டத்துடன் சாலை மறியல் நடத்த இருந்தோம். ஆனால் காவல் கண்காணிப்பாளரின் அறிவுரைக்கிணங்க அந்த சாலை மறியலை கைவிட்டோம். இந்த நாள் வரையிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. எனவே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி மார்த்தாண்டம் பகுதியில் சாலை மறியல் நடத்தப்படும். என மனுவில் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.