கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை மாணவர் ஜே. ஷாரோன் ஜஷ்டஷ் ஈரோட்டில் வ உ சி மைதானத்தில் வைத்து நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான 38 ஆவது இளையோர் U20 பிரிவில் நீளம் தாண்டுதல் தடகளப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.
மட்டுமின்றி இளையோர் தடகளப் போட்டியில் இதுவரை இருந்த சாதனையை முறியடித்து 7. 69 என்கிற புதிய சாதனையைப் படைத்தார். அத்தோடு தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியினையும் பெற்றார்.
தமிழகத்திற்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்த இந்த மாணவரையும் இதுபோன்ற சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி கல்லூரிக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வரும் உடற்பயிற்சி இயக்குனர்கள் முனைவர் ஏபி சீலன் மற்றும் பி அனிஷா ஆகியோரைக் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் செயலர் ஆண்டனி ஜோஸ், கல்லூரி முதல்வர் முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி எஸ் டி பி, கல்லூரி ஆன்மீக வழிகாட்டி அருட்பணியாளர் அஜின் ஜோஸ், துணை முதல்வர் ஆர் சிவனேசன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.