ஐபிஎல் போட்டியில் விளையாட நீதிமன்றத்தை நாடும் இலங்கையின் நுவான் துஷாரா

0
33

 ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யில் விளையாடுவதற்​காக நீதி​மன்ற அனு​ம​தியை இலங்கை வீரர் நுவான் துஷாரா நாடி​யுள்​ளார்.

இலங்கை கிரிக்​கெட் அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ராக இருப்​பவர் நுவான் துஷா​ரா. இந்​நிலை​யில் ஐபிஎல் போட்​டி​யில் விளை​யாட ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு (ஆர்​சிபி) அணி​யில் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டிருந்​தார் துஷா​ரா. ஆனால், அவர் உடற்​தகு​தித் தேர்​வில் தோல்வி அடைந்​த​தால் அவருக்கு ஆட்​சேபம் இல்​லாத சான்​றிதழ் ​(என்​ஓசி) வழங்​கப்​பட​வில்​லை.

இந்த சான்​றிதழ் இருந்​தால்​தான் அவர் ஐபிஎல் போட்​டி​யில் பங்​கேற்க முடி​யும் என்ற நிலை உள்​ளது. இதையடுத்து கொழும்பு மாவட்ட நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்துள்ளார் துஷா​ரா. அதில் அவர் கூறும்​போது, “நான் 2022-ம் ஆண்டு முதல் இலங்கை அணிக்​காக விளை​யாடி வரு​கிறேன். இது​வரை 30 சர்​வ​தேச டி20 போட்​டிகளில் பங்​கேற்​றுள்​ளேன்.

இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​துட​னான எனது ஒப்​பந்​தம் மார்ச் 31-ம் தேதி​யுடன் முடிவடைந்​து​விட்​டது. மேலும், வாரியத்​துடன் ஒப்​பந்​தத்​தைத் தொடர நான் விரும்பவில்லை. என்​ஓசி சான்​றிதழை தராத​தால் நான் ஐபிஎல் போட்​டி​யில் பங்​கேற்க முடிய​வில்​லை. எனவே, ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யில் நான் விளை​யாட எனக்கு அனு​ம​தியை பெற்​றுத் தரவேண்​டும்.

உடற்​தகுதி தேர்​வில் தோல்​வி​யுற்​றதை நீதி​மன்​றம் நிராகரிக்​கவேண்​டும்” என்​றார். இந்​நிலை​யில் இந்த மனுவை விசா​ரணைக்கு ஏற்ற நீதி​மன்​றம் அடுத்தகட்ட விசாரணையில் வரும் 9-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​துள்​ளது. கடந்த 2025-ம் ஆண்​டில் ஆர்​சிபி அணி​யால் ரூ.1.6 கோடிக்கு ஏலத்​தில் எடுக்​கப்​பட்​டார் துஷா​ரா. அந்த சீசனில் அவர் ஒரே ஒரு போட்​டி​யில் மட்​டுமே விளையாடினார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here