இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை: ராமதாஸ்

0
14

தமிழகத்​தில் ஈழத்​தமிழர்​களுக்கு வாக்​குரிமை அளிக்க மத்​திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: இலங்​கையில் 1983-ம் ஆண்டு நடந்த போர் காரணமாக​வும் பல்​வேறு கால​கட்டங்​களி​லும் பல்​லா​யிரக்​கணக்கான ஈழத் தமிழர்​கள் தமிழகத்துக்கு அடைக்​கலம் வந்தனர். உலகின் பல நாடு​கள் ஈழத் தமிழர்​களுக்கு குடி​யுரிமை வழங்​கி​யுள்​ளன. இந்​தி​யா​வில்​தான் ஈழத்தமிழ் மக்​கள் அகதி முகாம்​களி​லேயே ஆயுள் முழுதும் வாழ்ந்து முடிக்​கிறார்​கள்.

தற்​போதைய தலை​முறை​யா​வது சுதந்​திர​மாக வாழ வேண்டும். அதற்கு முதல்​கட்​ட​மாக தமிழகத்​தில் தற்​போது தொடங்​க​வுள்ள தீவிர வாக்​காளர் திருத்த பணி​யின் போது தமிழகத்​தில் வசிக்​கும் ஈழத்​தமிழர்​களுக்​கு வாக்​குரிமை அளிக்க வேண்​டும். இதற்கு மத்​திய, மாநில அரசுகள் நடவைக்கை எடுக்க வேண்​டும்.

தமிழகத்​தில் வாக்​காளர் திருத்த பணி​யில் ஈடு​படும் ஊழியர்​கள் அந்​தந்த பகு​தி​களுக்கு வரும்​போது பாமக நிர்​வாகி​கள் முழு ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும். தேர்​தல் அலு​வலர்​கள் நடத்​தும் கூட்​டங்களுக்கு தவறாமல் சென்று தகவல்​களை குறிப்​பெடுத்​து, சந்​தேகங்​களை தெளிவுபடுத்​திக் கொண்டு கட்​சி​யின் கீழ்​மட்ட நிர்​வாகி​கள், தொண்​டர்களுக்கு விழிப்​புணர்வு ஏற்படுத்த வேண்​டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here