இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி – ஜிம்பாப்வே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

0
22

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று ‘பி’ பிரி​வில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்​னாள் சாம்​பிய​னான இலங்​கை, ஜிம்பாப்வே அணி​யுடன் விளை​யாடியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 178 ரன்கள் குவித்​தது.

தனது 19-வது அரை சதத்தை அடித்த தொடக்க வீர​ரான பதும் நிசங்கா 41 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 62 ரன்கள் விளாசி​னார். குஷால் பெரேரா 22, குஷால் மெண்டிஸ் 14, துனித் வெல்​லாலகே 15, கமிந்து மெண்​டிஸ் 7, கேப்​டன் தசன் ஷனகா 6 ரன்​கள் சேர்த்​தனர். இறு​திக்​கட்ட ஓவர்​களில் மட்​டையை சுழற்​றிய பவன் ரத்​னாயகே 25 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​கள் விளாசி​னார்.

அவரது அதிரடி காரண​மாக இலங்கை அணி​யால் வலுவான இலக்கை கொடுக்க முடிந்​தது. கடைசி 2 ஓவர்களில் மட்​டும் பவன் ரத்​னாயகே 30 ரன்​களை விளாசியிருந்​தார். ஜிம்​பாப்வே அணி சார்​பில் கிரேம் கிரீமர், பிராடு இவான்​ஸ், பிளெசிங் முசா​ரா​பானி ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.

179 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஜிம்​பாப்வே அணி ஒரு கட்​டத்​தில் 14 ஓவர்​களில் 2 விக்​கெட்கள் இழப்​புக்கு 114 ரன்கள் எடுத்திருந்​தது. தடிவ​னாஷே மரு​மணி 26 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 34 ரன்​களும் ரியான் பரூல் 12 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ரன்களும் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர்.

ஜிம்​பாப்வே அணி​யின் வெற்​றிக்கு கடைசி 6 ஓவர்​களில் 65 ரன்கள் தேவை​யாக இருந்​தன. துஷான் ஹேமந்தா வீசிய 15-வது ஓவரில் ஜிம்​பாப்வே அணி​யின் கேப்​டன் சிகந்​தர் ராசா கடைசி 3 பந்​துகளில் 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்டரியை விரட்​டி​னார். இந்த ஓவரில் 20 ரன்​கள் சேர்க்கப்​பட்​டன. தீக்​சனா வீசிய அடுத்த ஓவரில் சிகந்​தர் ராசா தலா ஒரு பவுண்​டரி, சிக்​ஸரை விளாசி​னார்.

தில்​ஷான் மதுஷங்கா வீசிய 17-வது ஓவரின் முதல் பந்​தில் சிகந்​தர் ராசா சிக்​ஸர் விளாச, கடைசி பந்தை பிரையன் பென்​னட் பவுண்​டரிக்கு விரட்​டி​னார். இந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்​கப்​பட்​டன. சிகந்​தர் ராசா​வின் அதிரடி​யால் ஆட்​டம் ஜிம்​பாப்வே அணி​யின் கட்​டுக்​குள் வந்​தது. கடைசி 3 ஓவர்​களில் வெற்​றிக்கு 19 ரன்​களே தேவை என்ற நிலை உருவானது.

சீராக ரன்​கள் சேர்த்த பிரையன் பென்​னட் 41 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் அரை சதம் அடித்​தார். துனித் வெல்லாலகே வீசிய 18 ஓவரில் 6 ரன்​களை மட்​டுமே விட்டுக்​கொடுத்​தார். துஷான் ஹேமந்தா வீசிய 19-வது ஓவரின் 2-வது பந்​தில் சிகந்​தர் ராசா, எக்​ஸ்​டிரா கவர் திசையில் நின்ற தசன் ஷனகா​விடம் பிடி​கொடுத்து ஆட்டமிழந்​தார்.

சிகந்​தர் ராசா 26 பந்​துகளில், 2 பவுண்​டரி​கள், 4 சிக்ஸர்களுடன் 45 ரன்​கள் விளாசி​னார். இதையடுத்து களமிறங்​கிய தஷிங்கா முசேகிவா ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்​ட​மிழந்​தார். இந்த ஓவரில் 5 ரன்​கள் மட்டுமே எடுக்​கப்​பட்​டன. தீக்​சனா வீசிய கடைசி ஓவரில் 8 ரன்​கள் தேவை​யாக இருந்த நிலையில் முதல் பந்தை முன் யோங்கா சிக்​ஸருக்கு விளாசி அசத்​தி​னார்.

3-வது பந்தை பிரையன் பென்​னட் பவுண்​டரிக்கு விரட்ட ஜிம்​பாப்வே அணி 19.3 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்புக்கு 182 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. பிரையன் பென்​னட் 48 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​களும், முன்​யோங்கா 3 பந்​தில், 8 ரன்​களும் சேர்த்​தனர். 6 விக்கெட்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஜிம்​பாப்வே அணிக்கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்​தது.

அந்த அணி லீக் சுற்​றில் தோல்​வியை சந்​திக்​காமல் சூப்​பர் 8 சுற்று ஆட்​டங்​களை எதிர்​கொள்​கிறது. இலங்கை அணிக்கு இது முதல் தோல்​வி​யாக அமைந்​தது. சூப்​பர் 8 சுற்​றுக்கு அந்த அணி ஏற்​கெனவே தகுதி பெற்​றிருந்​தது. இலங்கை அணி லீக் சுற்றை 3 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் நிறைவு செய்​துள்​ளது.

சூப்​பர் 8 சுற்​றில் ஜிம்​பாப்வே அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி மேற்கு இந்​தி​யத் தீவு​களு​டன் மோதுகிறது. அதேவேளை​யில் இலங்கை அணி தனது முதல் ஆட்​டத்​தில் வரும் 22-ம்​ தேதி இங்​கிலாந்​துடன்​ பலப்பரீட்​சை நடத்​துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here