தமிழ்ப் புத்தாண்டு, விஷு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம்

0
19

தமிழ் புத்​தாண்டு தொடர் விடு​முறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்​து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: நாளை (10-ம் தேதி), நாளை மறு​நாள் (11-ம் தேதி) மற்​றும் 12-ம் தேதி (ஞா​யிற்​றுக் கிழமை) வார விடு​முறை மற்​றும் 14-ம் தேதி தமிழ் புத்​தாண்டு ஆகிய தொடர் விடு​முறையை முன்​னிட்​டு, சென்​னையி​லிருந்​தும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதனை கருத்​தில் கொண்டு தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் தினசரி இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன், கூடு​தலாக சிறப்பு பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு நாளை 575 பேருந்​துகளும், நாளை மறு​நாள் 395 பேருந்​துகளும், சென்னை கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர், பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு நாளை 100 பேருந்​துகளும், நாளை மறு​நாள் 90 பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மாதவரத்​திலிருந்து நாளை மற்​றும் நாளை மறு​நாள் மேற்​கண்ட ஊர்​களுக்கு 24 பேருந்​துகளும் மற்​றும் பெங்​களூர், திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களி​லிருந்​தும் பல்​வேறு இடங்​களுக்​கும் 200 சிறப்பு பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மேலும், ஞாயிறு மற்​றும் செவ்​வாய் ஆகிய தினங்​களில் சொந்த ஊர்​களில் இருந்து சென்னை மற்​றும் பெங்​களூர் திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவை​கேற்ப அனைத்து இடங்​களி​லிருந்​தும் ஞாயிற்​றுக்​கிழமை மற்​றும் செவ்​வாய்​கிழமை ஆகிய நாட்​களில் 735 சிறப்பு பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், இந்த வார இறு​தி​யில் வெள்​ளிக்​கிழமை அன்று 11,104 பயணி​களும் சனிக்​கிழமை அன்று 5,231 பயணி​களும், ஞாயிற்​றுக்​கிழமை அன்று 6,562 பயணி​களும் மற்​றும் ஏப்​.14ம் தேதி 5,285 பயணி​களும் பயணம் மேற்​கொள்ள முன்​ப​திவு செய்​துள்​ளனர்.

இச்​சிறப்பு பேருந்து இயக்​கத்​தினை கண்​காணிக்க அனைத்து பேருந்து நிலை​யங்​களி​லும் போதிய அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். எனவே, பயணி​கள் மேற்​கூறிய வசதி​யினை பயன்​படுத்தி தங்​களது பயணத்​தினை மேற்​கொள்​ளலாம்​. இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சிறப்பு ரயில்​கள்

விஷு பண்​டிகையை முன்​னிட்​டு, சென்னை – மங்​களூரு இடையே சிறப்பு ரயில்​களை தெற்கு ரயில்வே அறி​வித்​துள்​ளது. தமிழ்ப் புத்​தாண்​டு, விஷு பண்​டிகையை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, திரு​வனந்​த​புரம், கொல்​லத்​துக்கு சிறப்பு ரயில்​கள் நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டன.

இதன் தொடர்ச்​சி​யாக, மேலும் சில சிறப்பு ரயில்​களை தெற்கு ரயில்வே அறி​வித்​துள்​ளது. இதன்படி, மங்​களூரு சென்ட்​ரலில் இருந்து இன்​று (9-ம் தேதி) இரவு 8 மணிக்கு புறப்​படும் சிறப்பு ரயில் (06128), நாளை நண்​பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்​பூர் வந்​தடை​யும்.

சென்னை எழும்​பூரில் இருந்து நாளை (10-ம் தேதி) பிற்​பகல் 2.30 மணிக்கு புறப்​படும் சிறப்பு ரயில் (06153), மறு​நாள் காலை 6.55 மணிக்கு மங்​களூரு சென்ட்​ரலை வந்​தடை​யும்.

அங்​கிருந்து ஏப்​.15-ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்​படும் சிறப்பு ரயில் (06154), மறு​நாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்​பூர் வந்​தடை​யும். பெரம்​பூர், அரக்​கோணம், காட்​பாடி, ஜோலார்​பேட்​டை, சேலம், ஈரோடு, திருப்​பூர், போத்​தனூரில் இந்த ரயில்​கள் நின்று செல்​லும். இதுத​விர, மங்​களூரு சந்​திப்பு – திரு​வனந்​த​புரம் வடக்கு இடையே சிறப்பு ரயில் இயக்​கப்பட உள்​ளது. இத்​தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here