தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

0
28

நியூஸிலாந்து – தென் ஆப்​பிரிக்கா அணிகள் இடையி​லான கடைசி மற்​றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று கிறைஸ்ட்​சர்ச்​சில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 187 ரன்​கள் குவித்​தது.

அதி​கபட்​ச​மாக கானர் எஸ்​டர்​ஹுய்​சன் 33 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 75 ரன்​கள் விளாசி​னார். ரூபின் ஹெர்​மான் 39, வியான் முல்​டர் 39, தியான் பாரஸ்​டர் 21 ரன்​கள் சேர்த்​தனர். நியூஸிலாந்து அணி தரப்​பில் பென் சீயர்ஸ் 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார்.

188 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி​யால் 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 154 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது. அதி​கபட்​ச​மாக பெவன் ஜேக்​கப்ஸ் 36, டிம் ராபின்​சன் 25, ஜேம்ஸ் நீஷம் 24, டேன் கிளீவர் 22 ரன்​கள் சேர்த்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் ஜெரால்டு கோட்​ஸி, வியான் முல்​டர், ஓட்​னீல் பார்ட்​மேன் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.

33 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிக்க அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரை 3-2 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. ஆட்ட நாயகன் மற்​றும் தொடர் நாயக​னாக கானர் எஸ்​டர்​ஹுய்​சன் தேர்​வா​னார். அவர், இந்​தத் தொடரில் 200 ரன்​கள் குவித்திருந்தா​ர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here