அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கும் படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. மூன்று மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பூவையார் ஹீரோவாக நடிக்கிறார். அஜய் அர்னால்ட், அர்ஜுன் ஆகியோர் மற்ற மாணவர்களாக நடிக்கின்றனர்.
வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோஸ் சார்பில் கிளமண்ட் சுரேஷ் தயாரிக்கிறார். இதில் நடிகர் சவுந்தரராஜாவும் இணைந்துள்ளார்.
“மாணவர்களுக்கும் போலீஸ் துறைக்குமான ஆடுபுலி ஆட்டமாக விரியும் கதை இது. இதில் மிரட்டலான தோற்றத்தில், ஆர்வமிக்க கான்ஸ்டபிளாக நடித்திருக்கிறார் சவுந்தரராஜா. அவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்படும். இறுதிக்கட்ட பணிகள், தற்போது நடந்து வருகின்றன” என்கிறது படக்குழு. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் தோற்றம், வரவேற்பைப் பெற்றுள்ளது.