Home சினிமா செய்திகள் ஐமேக்ஸில் வெளியாகிறது சூரியின் ‘மண்டாடி’

ஐமேக்ஸில் வெளியாகிறது சூரியின் ‘மண்டாடி’

0

சூரியின் நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ படம் ஐமேக்ஸில் வெளியாக இருக்கிறது.

மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கும் ‘மண்டாடி’ படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் கீழ் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இப்படத்தில் சூரியுடன், மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். 

சமீபத்தில் ‘மண்டாடி’ படத்தின் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை கடந்திருப்பதாகவும், உலக அளவில் ரூ.150 கோடியை கடந்து இருப்பதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ‘மண்டாடி’ படம் ஐமேக்ஸில் வெளியாக இருக்கிறது. இந்த தகவலை சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர், ‘மீண்டும் ஓர் அதிரடி அனுபவத்துடன் ‘மண்டாடி’ படம் ஐமேக்ஸில் வருகிறது. ரசிகர்களின் வேண்டுகோள்படி ஐமேக்ஸ் அனுபவத்தை நாங்கள் கொண்டு வருகிறோம்.

அக்டோபர் 9 முதல் ஐமேக்ஸ், பிவிஆர் பலாஸோவின் பெரிய திரைகளில் ‘மண்டாடி’ உலகத்தை மீண்டும் ஒரு முறை அனுபவியுங்கள். ‘மண்டாடி’ திருவிழா தொடர்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் அக்டோபர் 8 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version