மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

0
19

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​திக்கு (79) கடந்த 5-ம் தேதி இரவு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது. உடனடி​யாக அவர் டெல்​லி​யில் உள்ள சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டார். அவருக்கு நுரை​யீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

மருத்​து​வர் அரூப் பாசு தலை​மையி​லான மருத்​து​வர்​கள், சோனியா காந்​திக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்​தனர். கடந்த சில நாட்​களாக அவர் மருத்​து​வ​மனை​யில் தங்கி சிகிச்சை பெற்​றார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் மருத்​து​வ​மனை​யில் இருந்து வீடு திரும்​பி​னார்.

இதுகுறித்து சர் கங்கா ராம் மருத்​து​வ​மனை டீன் அஜய் ஸ்வரப் கூறும்​போது, “மருத்​து​வ​மனை​யில் அளிக்​கப்​பட்ட மருந்​துகள் நல்ல பலனை அளித்​தன. ஞாயிற்​றுக்​கிழமை சோனியா டிஸ்​சார்ஜ் செய்​யப்​பட்​டார்” என்று தெரி​வித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here