ஆந்திராவில் சொத்து பிரச்சினை காரணமாக தந்தையின் உடலை 3 நாட்களாக அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகன்

0
19

சொத்​துக்​காக தந்​தை​யின் சடலத்தை அடக்​கம் செய்ய விடா​மல் தடுக்​கும் மகனால், 3 நாட்​களாக தந்​தை​யின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதை​யாய் கிடக்​கிறது.

ஆந்​திர மாநிலம், பல்​நாடு மாவட்​டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவ​சாயி ஆஞ்​சநே​யுலு (85). இவர் கூலி வேலை செய்​து, 20 ஏக்​கர் விவ​சாய நிலத்தை வாங்கி அதில் விவ​சா​யம் செய்து வந்​துள்​ளார்.

கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​னர் ஆஞ்​சநேயலு​வின் மனைவி உடல்நலம் குன்றி மரணமடைந்​தார். இவருக்கு நாகேஸ்வர ராவ், வெங்​கடேஸ்​வருலு என 2 மகன்​கள் உள்​ளனர். இதில் நாகேஸ்வர ராவ் காதலித்து திரு​மணம் செய்து கொண்​டு, தெலங்​கானா மாநிலத்​தில் வசித்து வரு​கிறார். இளைய மகன் வெங்​கடேஸ்​வருலு​விடம்​தான் பெற்​றோர் வசித்து வந்​தனர்.

தாய் இறந்த பின்​னர், தந்​தைக்கு மருத்​து​வம் உட்பட அனைத்​தை​யும் இளைய மகனே செய்து வரு​கிறார். இந்​நிலை​யில், உடல்​நலம் குன்றி கடந்த 3 நாட்​களுக்கு முன்​னர், ஆஞ்​சநே​யுலு உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து மூத்த மகன் நாகேஸ்வர ராவுக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. அவரும் தனது குடும்​பத்​தா​ருடன் வந்​தார். அதன் பின்​னர், உற்​றார், உறவினர்​கள், நண்​பர்​கள், அக்​கம்​பக்​கத்​தார் என பலர் ஆஞ்​சநே​யுலு​வுக்கு இறுதிச் சடங்​குக்கு ஏற்​பாடு செய்​தனர். அப்​போது பாடை​யில் ஏற்​றிய தந்​தை​யின் உடலை எடுக்க விடா​மல் நாகேஸ்வர ராவ் தடுத்து நிறுத்​தி​னார்.

எனக்கு சொத்​தில் சரி​பாதி கொடுத்து விட்​டுத்​தான் சடலத்தை எடுக்க வேண்​டும். இல்​லா​விட்​டால், எத்​தனை நாட்​களா​னாலும் சரி சடலத்தை எடுக்க விட மாட்​டேன் என கூறி வருகிறார். ஏற்​கெனவே தாய் இறந்​த​போது சொத்​தில் 2 ஏக்​கர் நிலம் கொடுத்து விட்​டேன். பெற்​றோரை கடைசிவரை நான்​தான் பார்த்துக் கொண்​டேன். ஆதலால், இனி ஒரு சல்லி காசு கூட நான் கொடுக்க மாட்​டேன் என தம்பி வெங்​கடேஸ்​வருலு​வும் கறா​ராக சொல்லி விட்​டார்.

கிராமத்​தினர், உற்​றார், உறவினர்​கள் எவ்​வளவோ எடுத்து கூறி​யும் சடலத்தை எடுக்கவிடாத காரணத்​திலால் ஆஞ்​சநே​யுலு​வின் உடல் வீட்டு வாசலிலேயே வைக்​கப்​பட்டு உள்​ளது. போலீ​ஸாரும், ஊராட்சி மன்​றத்​தினரும் கூட இரு தரப்​பினரிடம் பேசினர். சடலத்தை எடுக்கா விட்​டால், பஞ்​சா​யத்​தாரே அந்த சடலத்​துக்கு இறுதி மரி​யாதை செலுத்தி அடக்​கம் செய்து விடு​வோம் என எச்​சரித்​தும் பலன் இல்​லை.

யாருடைய சமரசத்​துக்​கும் மகன்​கள் ஒப்​புக்​கொள்​ளாத​தால் கடந்த 3 நாட்​களாக தந்​தை ஆஞ்​சநே​யுலு​வின்​ சடலம்​ வீட்​டு வாசலிலேயே வைக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here