மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக் கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான மாசிக் கொடை விழா வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இந்த கொடையை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை பந்தல்கால் நாட்டு விழா நடந்தது. காலை 7:30 முதல் 8:30 மணிக்குள் பந்தல்கால் நட்டு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், தேவஸ்தான கண்காணிப்பாளர் சண்முகம் பிள்ளை, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாநாட்டு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் மாநாட்டு பந்தல்கால் நாட்டு விழா நடந்தது.
இதில் நிர்வாகிகள், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்று மாலை 6:30 மணிக்கு தீபாராதனை, இரவு 8:30 மணிக்கு தீபாராதனை, 9:30 மணிக்கு அம்மன் பல்லக்கில் பவனி, 11 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது.














