நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் கதை எழுதி தயாரிக்கும் படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் அஸ்வத் மாரிமுத்து, தெலுங்கு நடிகர் சிவாஜி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப் படத்துக்குச் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றிய 6 உதவி இயக்குநர்கள் இணைந்து, தி ஆல்ஃபா யூனிட் என்ற பெயரில் இயக்கி, அறிமுகமாகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இப்படத்தின் அறிமுக காணொளி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பின்னணி இசை, முன்னணி நட்சத்திரங்களின் திரைத் தோற்றம், கான்செப்ட் ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
