Home சினிமா செய்திகள் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ அக்டோபரில் ரிலீஸ்!

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ அக்டோபரில் ரிலீஸ்!

0

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படம் அக்டோபரில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இன்று (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ படம் குறித்த அறிவிப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன.

இன்று பிறந்த நாளை முன்னிட்டு, ‘சேயோன்’ அறிமுக வீடியோவினை வெளியிட்டுள்ளது படக்குழு. குறுகிய கால தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கி, அக்டோபரில் வெளியாகும் என்று படக்குழு இப்போதே அறிவித்துள்ளது. இது திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கிறது. அக்டோபர் 16-ம் தொடங்கி வரும் நீண்ட விடுமுறை நாட்களில் இப்படம் வெளியாகும் என தெரிகிறது.

இதில் சிவகார்த்திகேயனின் லுக், வசனம் என அனைத்துக்குமே இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதன் நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஒளிப்பதிவாளராக விவேக் விஜயகுமார், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version