Home மாநில செய்திகள் எஸ்ஆர்எம்யூ கண்ணையாவிடம் எஸ்ஐடி விசாரணை: ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில் போலீஸார் நடவடிக்கை

எஸ்ஆர்எம்யூ கண்ணையாவிடம் எஸ்ஐடி விசாரணை: ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கில் போலீஸார் நடவடிக்கை

0

சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் தொழில் அதிபர் வீரமணி மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, வழக்கில் இருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் சொத்து விற்பனை விவகாரங்களும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளன.

அந்த வகையில் முக்கிய நபராகக் கருதப்படும் எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷ், வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவருக்கு எதிராக ஏற்கெனவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாஸ்போர்ட்டை முடக்கவும் சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெம் வீரமணியை வழக்கில் இருந்து தப்பிக்க உதவும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்வதற்கும், பணப்பரிமாற்றங்களுக்கும் பிரகாஷ் உதவியதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் ஏற்கெனவே சம்மன் அனுப்பி யிருந்தனர். இந்நிலையில், எஸ்ஆர்எம்யூ கண்ணையாவிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) போலீஸார் 2 நாட்களுக்கு முன்னர், சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, பிரகாஷ் தற்போது எங்கு இருக்கிறார்? அவருக்கும் வீரமணிக்கும் இடையே உள்ள தொடர்பு, பணப்பரிமாற்றங்களில் அவரது பங்கு, வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதற்கான காரணம் என்ன? என பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிரகாஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு தொடர்பாக எஸ்ஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை நவ.20-க்கு தள்ளிவைத்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version