நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் 2 கட்டங்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், 3-வது கட்டமாக எஞ்சிய 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. இருப்பினும், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் தற்போதைக்கு எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாது என்பதையும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நாடு முழுவதும் நடைபெற்று வரும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பட்டியல் தயாரிப்புப் பணிகளுடன், எஸ்ஐஆர் பணிகளும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன’ என்று தெரிவித்தனர்.
