22 மாநிலங்களில் ஏப்ரலில் எஸ்ஐஆர் பணி தொடக்கம்

0
18

பிஹாரில் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் எஸ்ஐஆர் பணிக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறு 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

இதன் படி ஆந்திரா, கர்நாடகா, அருணாச்சல பிரதேசம், சண்டிகர், தாத்ரா நாகர் ஹவேலி, டையூ-டாமன், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலங்கானா, உத்தரா கண்ட் ஆகியவற்றில் வரும் ஏப்ரலில் எஸ்ஐஆர் பணி நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here