சுமார் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு உதவிய பாடகி பலக் முச்சால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழில் அனுஷ்கா நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ உள்பட சில படங்களில் பாடியுள்ள இவர், தனது சகோதரர் பலாஷுடன் இணைந்து, அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.
இதன் மூலம் ஏழைக் குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்காக நிதி திரட்டி வழங்குகிறார். இதுவரை
3,800-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைகளுக்கான நிதி உதவிகளைச் செய்துள்ளார். இதற்காக லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார்.
ஏழைக் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை, அவர்கள் ரயில் பெட்டிகளைச் சுத்தம் செய்வதைப் பார்த்தபோது தொடங்கியது என்று தெரிவித்துள்ள பலக், இதற்கு நிதி திரட்டுவதற்காகவே இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.














