சிங்கப்பூர் ரூ.1 லட்சம் கோடி, ஜப்பான் ரூ.11,000 கோடி முதலீடு – உ.பி. முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு பலன்

0
16

உத்​தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய ​நாத் தொழில் முதலீடு​களுக்​காக சிங்​கப்​பூர் மற்​றும் ஜப்​பான் பயணம் மேற்​கொண்​டுள்​ளார். உ.பி.​யில் சிங்​கப்​பூர் நிறு​வனங்​கள் ரூ.1 லட்சம் கோடி, ஜப்​பான் நிறு​வனங்​கள் ரூ.11.000 கோடி முதலீடு செய்ய புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது.

உத்​தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​ நாத் ஜப்​பானுக்கு தொழில் முதலீடு பெற பயணம் மேற்​கொண்​டுள்​ளார். தனது பயணத்​தின் முதல் நாளில் நேற்று அவர் டோக்​கியோவுக்கு சென்றடைந்​தார். அங்கு அவருக்கு நெற்​றி​யில் தில​கம் இட்டு சிறப்பான வரவேற்பு வழங்​கப்​பட்​டது.

முதல் நாளில், உலகளா​விய வர்த்தக மற்​றும் முதலீட்டு நிறுவனமான மிட்​சுய் & கோ நிர்​வாகத்​தினரை முதல்​வர் யோகி சந்​தித்​தார். இவர்​களிடம், புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தி, சூரிய சக்​தி, உயிரி ஆற்​றல், பசுமை ஹைட்​ரஜன் மற்​றும் எரிசக்தி சேமிப்பு திட்டங்​கள் ஆகிய 4 முக்​கிய துறை​களில் முதலீட்டு வாய்ப்​பு​களை முதல்​வர் யோகி எடுத்​துரைத்​தார்.

இக்​கூட்​டத்​தில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது: அடிமட்ட அளவில் இருந்து இந்​தி​யா-ஜப்​பான் பொருளா​தார ஒத்துழைப்பை வலுப்​படுத்த உ.பி. அரசு உறுதி பூண்​டுள்​ளது. இந்தி​யா​வின் மிகப்​பெரிய நுகர்​வோர் சந்​தை​யாக, உ.பி விளங்குகிறது. உ.பி.​யில் சிறந்த இணைப்​பு, பிரத்​யேக சரக்கு வழித் ​தடங்​கள், விரைவுச் சாலை வலை​யமைப்பு மற்​றும் தொழில்துறை கிளஸ்​டர்​கள் என முதலீட்​டாளர்​களுக்கு மிக​வும் சாதக​மான சூழலை அரசு வழங்​கு​கிறது.

உ.பி.​யில் வெளி​நாட்டு நிறு​வனங்​கள் முதலீடு செய்​யத் தேவையான அனைத்து வசதி​கள், உதவி​களை வழங்க அரசு தயாராக உள்​ளது. இவ்​வாறு முதல்​வர் யோகி உறு​தி​யளித்​தார். இதையடுத்​து, முதல்​வர் யோகி​யின் முதல்​நாள் ஜப்​பான் பயணத்தில் பல்​வேறு ஜப்​பானிய நிறு​வனங்​களு​டன் சுமார் ரூ.11,000 கோடி மதிப்​புள்ள புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தா​யின. இதில், குபோடா கார்ப்​பரேஷன், மிண்டா கார்ப்​பரேஷன், ஜப்​பான் ஏவி​யேஷன் எலக்ட்​ரானிக்ஸ் இண்டஸ்ட்ரி, நாகசே & கோ. லிமிடெட் உள்ளிட்டவை இடம் பெற்றுள்​ளன.

முன்​ன​தாக முதல்​வர் யோகி​யின் 2 நாள் சிங்​கப்​பூர் பயண​மும் இருந்​தது. இங்கு முதல்​வர் யோகி​யின் கூட்​டத்​தில் சிங்​கப்​பூரின் உயரிய 100 நிறு​வனங்​களின் தலைவர்​கள் கலந்து கொண்​டனர். இதில், அந்​நாட்டு நிறு​வனங்​கள் உ.பி.​யில் முதலீடு செய்ய ரூ.1 லட்சம் கோடிக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்திட்டுள்ளன. இது ​போன்ற வெளி​நாட்டு தொழில் முதலீடு​கள் மூலம் உ.பி.​யின் தொழில் பொருளா​தா​ரம் வரும் 2029-30ம் ஆண்​டு​களுக்​குள்​ அதி​க அளவில்​ உயரும்​ என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here