ரீரிலீஸ் ஆகிறது சிம்​பு​வின் ‘சிலம்பாட்டம்’

0
66

சிலம்​பரசன் நடித்த ‘சிலம்பாட்டம்’ திரைப்​படம் புது பொலிவுடன் மீண்​டும் வெளி​யாகிறது. சிம்பு இரண்டு வேடங்​களில் நடித்து 2008-ம் ஆண்டு வெளியான படம், ‘சிலம்​பாட்​டம்’. பிரபு, சினே​கா, கருணாஸ், கிஷோர், சந்​தானம், சனா கான் உள்பட பலர் நடித்​துள்ள இப்​படத்​தைச் சரவணன் இயக்​கினார்.

யுவன் சங்​கர் ராஜா இசை அமைத்த இப்​படத்தை லக் ஷ்மி மூவி மேக்​கர்ஸ் சார்​பில் கே.​முரளிதரன், வி.சு​வாமிநாதன், டி.எஸ்​.ரங்​க​ராஜன் தயாரித்​திருந்​தனர். இந்​நிலை​யில் சிலம்​பரசனின் பிறந்த நாளை முன்​னிட்டுபிப். 6-ம் தேதி ரி ரிலீஸ் ஆகிறது. இதை எல்மா பிக்​சர்ஸ் சார்​பில் எத்தில் ராஜ் வெளி​யிடு​கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here