Home கன்னியாகுமரி செய்திகள் வெள்ளிகோடு: சாலையோரம் மின்கம்பத்தில் மோதிய கார்

வெள்ளிகோடு: சாலையோரம் மின்கம்பத்தில் மோதிய கார்

0

தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியில் இன்று அதிகாலை திருவனந்தபுரம் – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் கொண்டு செல்லப்பட்டு வந்தது. திடீரென அந்த காரின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பகுதியில் உள்ள சாலையோர மின்கம்பத்தில் மோதி அருகில் இருந்த வீட்டில் மோதி கார் நின்றது. 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரினுள் இருந்தவர்கள் படுகாயம் இன்றி உயிர் தப்பினர். இது குறித்த தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மின்வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version