நடிகர் சித்தார்த், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ‘அன்அக்கஸ்டம்டு எர்த்’ (Unaccustomed Earth) என்ற வெப் தொடரில் நடிக்கிறார்.
இதில், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ ஃபிரீடா பிண்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமெரிக்க எழுத்தாளரான ஜும்பா லஹிரியின் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் உருவாகியுள்ளது. 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த ரொமான்டிக் கதை, கலாச்சார ரீதியிலான தொடராகவும் அமையும்.
இந்திய-அமெரிக்கச் சமூகத்துக்குள் அமைக்கப்பட்ட இந்தத் தொடர் காதல், ஆசை, அடையாளம், கலாச்சாரம் மற்றும் உறவுகளிடையேயான எதிர்பார்ப்புகளைச் சொல்கிறது.