வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு: விறகு அடுப்புக்கு மாறிய கேட்டரிங் நிறுவனங்கள்

0
25

வணிக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்டர்கள் தட்​டுப்​பாட்​டால், சென்​னை​யில் உள்ள பல்​வேறு கேட்​டரிங் நிறு​வனங்​கள் மீண்​டும் விறகு அடுப்​புக்கே மாறி​யுள்​ளன.

போர் காரண​மாக வணிக பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்டு ஏற்​பட்​டுள்​ள​தால், சென்னை முழு​வதும் உள்ள உணவு தயாரிப்பு மற்​றும் கேட்​டரிங் நிறு​வனங்​கள் கடும் பாதிப்​பைச் சந்​தித்​துள்​ளன.

சென்​னை​யில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள் வழக்​கம்​போல் விநி​யோகம் செய்​யப்​பட்டு வந்​தா​லும், உணவகங்​கள், டீக்​கடைகள் மற்​றும் கேட்​டரிங் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​படும் வணிக சிலிண்​டர்​களுக்கு பெரும் தட்​டுப்​பாடு நிலவி வரு​கிறது.

இதன் காரண​மாக, பல ஆண்​டு​கள் கழித்து மீண்​டும் விறகு அடுப்​பைப் பயன்​படுத்தி சமைக்​கும் நிலைக்கு உணவு தயாரிப்​பாளர்​கள் தள்​ளப்​பட்​டுள்​ளனர்.

ஏற்​கெனவே திரு​மணங்​கள், காதுகுத்து உள்​ளிட்ட சுபநிகழ்ச்​சிகளுக்கு ஆர்​டர்​களைப் பெற்​று​விட்​ட​தால், வாடிக்​கை​யாளர்​களுக்கு ஏமாற்​றம் அளிக்​கக் கூடாது என்​ப​தற்​காக மயி​லாப்​பூர் உள்​ளிட்ட பகு​தி​களைச் சேர்ந்த கேட்​டரிங் தொழில் செய்​வோர், சிலிண்​டருக்கு பதிலாக வேறு வழி​யின்​றி, கிடங்​கு​களில் பல ஆண்​டு​களாக தூக்​கிப் போடப்​பட்​டிருந்த பழைய விறகு அடுப்​பு​களை தூசி தட்டி எடுத்து வந்​து, தற்​போதைய சமையல் தேவைக்கு பயன்​படுத்​தத் தொடங்​கி​யுள்​ளனர்.

இதனால் நேர விர​யம் மட்​டுமின்​றி, சுகா​தார ரீதி​யான சவால்​களை​யும் இவர்​கள் சந்​தித்து வரு​கின்​றனர். இதுகுறித்து சமையல் கலைஞர் ஒரு​வர் கூறுகை​யில், “கடந்த 10 ஆண்​டு​களாக காஸ் அடுப்​பு​களுக்கு முழு​மை​யாக மாறி​விட்​டோம்.

தற்​போது சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால் மீண்​டும் விறகு அடுப்​புக்கு திரும்​பி​யிருப்​பது பல சவால்​களை ஏற்​படுத்​துகிறது. காஸ் அடுப்​பில் ஒரு மணி நேரத்​தில் செய்​யக்​கூடிய வேலை​யை, விறகு அடுப்​பில் செய்ய கூடு​தல் நேரம் ஆகிறது.

தற்​போதைய இளம் தலை​முறை சமையல் கலைஞர்​களுக்கு விறகு அடுப்​பில் சமைக்​கும் பழக்​கம் இல்​லாத​தால், தீயின் வேகத்​தைக் கட்​டுப்​படுத்தி சமைப்​பது கடின​மாக உள்​ளது” என்று தெரி​வித்​தார்.

இதற்​கிடையே வீடு​களுக்​கான சமையல் காஸ் சிலிண்​டர் பதிவு செய்து ஒரு வார​மாகி​யும் சிலிண்​டர் டெலிவரி ஆகாத​தால், பெரும்​பாலான குடும்​பத்​தினர் மின்​சார அடுப்​பு​களுக்கு மாற தொடங்​கி​யுள்​ளனர்.

இதனால் சென்​னை​யில் மின்​சார அடுப்​பு​களின் விற்​பனை​யும் அமோக​மாக நடந்து வரு​கிறது. அதே​போல் ‘டர்​போ’ விறகு அடுப்​பு​களுக்​கும் மவுசு கூடி​யுள்​ளது.

இதுத​விர சென்​னை​யில் உள்ள பல்​வேறு ஹோட்​டல்​களில் இட்​லி, தோசை, ஆம்​லெட் போன்​றவை கிடைக்​காது என அறி​விப்​புப் பலகைகளை வைக்​கத் தொடங்​கி​விட்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here