Home கன்னியாகுமரி செய்திகள் கடையால்: சாலையில் கிடந்த பர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு

கடையால்: சாலையில் கிடந்த பர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு

0

கடையால் பேருராட்சி, கணபதிக்கல் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் மனைவி லீலா. இவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது லீலாவின் பர்ஸ் ஒன்று கீழே விழுந்தது. இதனை அறியாமல் இருவரும் சென்று விட்டனர். அந்த நேரம் அந்த வழியாக கடையால் பேரூராட்சியின் துணைத் தலைவி விஜி மெர்லின் என்பவர் வந்தார். 

பின்னர் அவர் சாலையில் கிடந்த பர்ஸை எடுத்து பார்த்தபோது அதில் ரூபாய் 7,500 மற்றும் அரை பவுன் தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்கள் இருந்தன. இதை எடுத்து விஜி மெர்லின் அந்த வழியாக வந்தவரிடம் பர்ஸ் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் பர்ஸ் மாயமானது அறிந்த லீலா கணவருடன் மீண்டும் அந்த வழியே வந்தார். பேரூராட்சித் துணைத் தலைவர் லீலாவிடம் பர்ஸ் குறித்து கேட்டு, அவருடையது தான் என்பதை உறுதி செய்துவிட்டு பர்சை ஒப்படைத்தார். பர்சை ஒப்படைத்ததற்காக லீலா பேரூராட்சி துணை தலைவர் விஜி மெர்லினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version