‘சகுனி’ பட இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காலமானார்

0
271

கார்த்தி நடித்த ‘சகுனி’ பட இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.

2012ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான படம் சகுனி. சந்தானம், ப்ரணிதா சுபாஷ், ராதிகா, நாசர் உள்ளிட்டோர் நடித்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சங்கர் தயாள் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்படம் பல்வேறு காரணங்களால் தடைபட்டது. இதனையடுத்து யோகி பாபு நடிப்பில் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என்ற படத்தை சங்கர் தயாள் இயக்கவிருந்தார்.

இந்த படம் குறித்த புரோமொஷன் நிகழ்ச்சி வியாழக்கிழமை (டிச.19) சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள வந்த சங்கர் தயாள் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அவரை கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் தயாள் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here