’சக்தித் திருமகன்’ கதை திருட்டு விவகாரத்திற்கு இயக்குநர் அருண்பிரபு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்த படம் ‘சக்தித் திருமகன்’. செப்டம்பர் 19-ம் தேதி வெளியான இப்படம் அக்டோபர் 24-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகிவிட்டது. சமீபத்தில் இப்படத்தினை பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் பாராட்டியிருந்தார்.
இதனிடையே, இக்கதை தான் எழுதி காப்பிரைட்ஸ் வாங்கி வைத்திருந்த ‘தலைவன்’ என்ற படத்தின் கதை என சுபாஷ் சுந்தர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தையும் குறிப்பிட்டிருந்தார். சுபாஷ் சுந்தரின் பதிவு இணையத்தில் வைரலாக பரவியது.
இது தொடர்பாக ‘சக்தித் திருமகன்’ படத்தின் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன், “மிகவும் தவறான அவதூறு. சொந்த உழைப்பில் பல வருடங்கள் உழைத்து எழுதியது. நன்றி வணக்கம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சுபாஷ் சுந்தரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது விரைவில் தெரியவரும்.
 
            

