Home உலக செய்திகள் ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலை வழக்கில் பாலியல் தொழிலாளி கைது

ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலை வழக்கில் பாலியல் தொழிலாளி கைது

0

கடந்த 2014-ம் ஆண்​டில் உக்​ரைன் கடற்​படை நீர்​மூழ்கிக் கப்​பலின் கேப்​ட​னாக இருந்த ராபர்ட் ஷகீவ், ரஷ்ய ஆதரவாள​ராக மாறி​னார். அவர் ரஷ்ய கடற்​படை​யின் மூத்த தளபதி​யாக நியமிக்​கப்​பட்​டார்.

செவஸ்​டோ​போல் நகரில் ராபர்ட் ஷகீவ் (49) குடும்​பத்​துடன் வசித்து வந்​தார். கடந்த 13-ம் தேதி அங்​குள்ள கடைக்கு அவர் சென்​றார். வெளியே வந்​த​போது வாசலில் இருந்த குப்​பைத் தொட்டி வெடித்​துச் சிதறியது. இதில் ராபர்ட் ஷகீவ் சம்பவ இடத்திலேயே உயி​ரிழந்​தார்.

இதுதொடர்​பாக சிசிடிவி கேம​ராக்​களின் பதிவு​களை ரஷ்ய போலீஸார் ஆய்வு செய்​தனர். அப்​போது ரஷ்​யா​வின் சோச்சி பகுதி​யைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி மார்​கரிட்டா ராய்ட் (32), ஒரு காரில் இருந்து ரிமோட் கன்ட்​ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்​கச் செய்​திருப்​பது தெரிய​வந்​தது. அவர் கைது செய்யப்பட்டார். அவர் உக்​ரைன் ராணுவத்​தின் உளவாளி​யாக செயல்பட்​டிருப்​பது போலீஸ் வி​சா​ரணை​யில் உறு​தி செய்யப்பட்டு உள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version