Home தேசிய செய்திகள் ஹைதராபாத் பாரில் பாலியல் கும்பல் கைது – இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரி நடவடிக்கை

ஹைதராபாத் பாரில் பாலியல் கும்பல் கைது – இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரி நடவடிக்கை

0

ஹைத​ரா​பாத் கூகட்​பல்லி பகு​தி​யில் உள்ள ‘கிளப் மஸ்​தி’ எனும் பார் வெகு பிரசித்​தம். இதனை ‘கு​யின்ஸ் அண்ட் கிங்ஸ் பப்’ என்​றும் அழைப்​பர். இங்கு இரவில் நிபந்​தனை​களை மீறி ஆட்​டம், பாட்​டு, கொண்​டாட்​டம் என கேளிக்கை விருந்​துகள் நடந்து கொண்டே இருக்​கும்.

இந்த பாரில் இளம் பெண்​கள் நடன​மாடியபடியே, கஸ்​டமர்​களை கவர்ந்​து, அவர்​களை அளவுக்கு அதி​க​மாக மது​பானம் குடிக்க வைத்​து, பணத்தை பில்​லுக்கு மேல் போட்டு தீட்​டு​வதும் வழக்​கம் என கூறு​வர். அப்​படியே அந்த கஸ்​டமரை மடக்கி அதே பாருக்​குள் உள்ள அறை​களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் புகார்கள் உண்டு. மேலும், 18 வயதுக்​குள் உள்ள மைனர்​களும் மிக அதி​க​மாக வரும் பார் இது தான் எனும் பெயரும் இதற்கு உண்​டு.

இவ்​வாறு பல நிபந்​தனை​களை மீறி நடக்​கும் இந்த பார் மீது பல்​வேறு புகார்​களும் வழக்​கு​களும் உள்​ளன. இதனிடையே சைபராபாத் பகு​திக்கு 2020 தெலங்​கானா பிரிவைச் சேர்ந்த ரித்​தி ராஜ் இணை போலீஸ் ஆணை​ய​ராக பணி​யில் சேர்ந்​தார். இவருக்கு வந்த ரகசிய தகவலின்​படி, கடந்த ஞாயிற்​றுக் ​கிழமை நள்​ளிரவு சாதாரண பெண்ணைப் போல் கூகட்​பல்லி கிளப் மஸ்தி பாருக்கு சென்​றார். அங்கு நடக்​கும் அனைத்​தை​யும் கவனித்​தார். உடனே, வெளி​யில் காத்​திருந்த போலீ​ஸாருக்கு தகவல் கொடுத்தார். அவர்​களும் அதிரடி​யாக அந்த பாருக்​குள் நுழைந்தனர்.

அப்​போது பாருக்​குள் நிபந்​தனை​களை மீறி நடந்து கொண்ட 5 ஆண்​கள் மற்​றும் 4 பெண்​களை கைது செய்து அழைத்​துச் சென்று போலீஸ் நிலை​யத்​தில் வைத்து விசா​ரணை நடத்​தி​னார். அப்​போது இந்த பாரின் பின்​புல​மாக இருந்து செயல்​படும் அரசியல்​வா​தி​கள், அரசு அதி​காரி​கள் குறித்​தும் தெரிய​வந்​தது. மேலும், இந்த பாரில் கஞ்சா உள்​ளிட்ட போதைப் பொருட்​கள் கை மாறுகிற​தா ? எனும் கோணத்​தி​லும் தீவிர வி​சா​ரணை நடைபெற்று வரு​கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version