குற்றம்சாட்டப்பட்ட 2,000 பேரிடமும் விசாரித்தால் செந்தில் பாலாஜி மீதான விசாரணை வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது: உச்ச நீதிமன்றம்

0
194

போக்​கு​வரத்​துத் துறை​யில் வேலை​வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்று மோசடி செய்​ததாக தொடரப்பட்ட வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் வாழ்​நாள் முழு​வதும் இந்த விசா​ரணை முடிவுக்கு வராது என உச்ச நீதி​மன்​றம் கருத்து தெரி​வித்​துள்​ளது.

போக்​கு​வரத்து துறை​யில் வேலைக்கு பணம் பெற்ற விவ​காரத்​தில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு எதி​ராக ஒய்​.​பாலாஜி என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​திருந்​தார். இந்த வழக்கு நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் கோபால் சங்கர நராயணன் வாதத்​தில் கூறிய​தாவது: இந்த லஞ்ச ஊழல் வழக்​கில் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது. வழக்கை முறை​யாக தமிழக காவல்​துறை நடத்தவில்லை. வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ள​தால் அவர்​கள் வழக்கை முறை​யாக நடத்​தாமல் இழுத்​தடிக்​கின்​றனர். குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் எண்​ணிக்கை அதிக அளவில் உள்​ள​தால் இந்த விசா​ரணை தற்​போது முடி​யாது, எனவே பிர​தான​மாக குற்​றம்​சாட்​டப்​பட்ட நபர்​களை விசா​ரிக்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு வாதிட்​டார்.

தொடர்ந்து நீதிப​தி​கள் கூறிய​தாவது: ஒவ்​வொரு வழக்​கிலும் 900, 1000 என குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​களின் எண்​ணிக்கை இருந்​தால் விசா​ரணை எப்​போது முடிவடை​யும், இப்​படியே போனால் எத்​தனை ஆண்​டு​களா​னாலும் இந்த வழக்கு முடியப்​போவ​தில்​லை. மேலும், லஞ்​சம் கொடுத்​தவர்​கள் என்று அழைக்​கப்​படும் ஏழைகளை​யும், வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட 2,000 அல்​லது 2,500 பேரையும் விசா​ரணை செய்​தால், முன்​னாள் அமைச்​சர் மீதான இந்த விசா​ரணை வாழ்​நாள் முழு​வதும் முடிவுக்கு வராது.

அதே​போல, குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​களை மட்​டும் சிக்​கவைப்​பதே எதிர்​தரப்பு முயற்​சி​யாக உள்​ளது. இது சிஸ்​டம் மீதான ஒரு மோசடி. அமைச்​சரைத் தவிர, கூறப்​படும் இடைத்​தரகர்​கள், தரகர்​கள் யார், அமைச்​சரின் பரிந்​துரை​யின்​பேரில் செயல்பட்டதாகக் கூறப்​படும் அதி​காரி​கள்யார், வேலைக்கு எடுக்​கும் தேர்​வுக்​குழு உறுப்​பினர்​கள் யார், பணம் பெற்​றுக்​கொண்டு தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு நியமனம் வழங்​கிய அதி​காரி​கள் யார்என்பன போன்ற விவரங்​களை அறிய விரும்புகிறோம்.

அது தொடர்​பாக தமிழக அரசு விளக்​கம் அளிக்க வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் குறிப்​பிட்​டனர். அப்​போது தமிழக அரசுசார்பில் மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் சிங்வி மற்​றும் கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் அமிதா ஆனந்த் திவாரி ஆகியோர், “இந்த ஒட்​டு மொத்த வழக்கு தொடர்​பாக​வும், இணைக்​கப்​பட்ட வழக்கு தொடர்​பாக​வும், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் யார் யார் என்ற மொத்த விவரம் அடங்​கிய ஒரு சிறு குறிப்பை தாக்​கல் செய்ய உள்​ளோம்” என்றனர்​. இதையடுத்​து வழக்​கு இன்று தள்ளிவைக்​கப்​பட்​டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here