சீனியர் டிவிஷன் கால்பந்து சென்னையில் இன்று தொடக்கம்

0
9

சென்னை கால்பந்து சங்​கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்​டிகள் இன்று (5-ம் தேதி) செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் தொடங்​கு​கிறது.

இதில் தளபதி ஸ்டா​லின் எஃப்​சி, வரு​மான வரித்​துறை ஆர்சி, மத்​திய கலால் துறை, ஆக்​டோபஸ் மரைன், ஐசிஎஃப், சென்னை நகர காவல்​துறை, இந்​தி​யன் வங்கி எஸ்​&ஆர்​சி, டிபிஒய்சி கீழ்ப்​பாக்​கம், சென்னை சுங்​கவரித்துறை, தமிழக காவல்​துறை,தாவூத் மெமோரியல் எஃப்​சி, ஏஜிஓஆர்சி ஆகிய 12 அணி​கள் கலந்து கொள்கின்றன.

போட்​டி​யின் தொடக்க விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடை​பெறுகிறது. இதில் தமிழ்​நாடு மெர்க்​கண்​டைல் வங்​கி​யின் துணைத் தலை​வர் பி.​ராஜவேல், எம்​எல்​ஏ-க்​கள் எம்.கே.மோகன், பி.​தாயகம்கவி மற்​றும் கார்த்திக் மோகன், கவுன்​சிலர் எம்​.சர​வணன், எஸ்​.க​ணேஷ், கே.​ராணி, ஆர்​.​ரா​தாகிருஷ்ணன், ஆர்​.செந்​தில்​கு​மார், சென்னை கால்​பந்து சங்​க துணைத் தலை​வர் டி.ரமேஷ் பாபு உள்​ளிட்​டோர் கலந்​து கொள்​கின்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here