Home சினிமா செய்திகள் சேனாதிபதி ரிட்டர்ன் ‘இந்தியன் 3’-ஐ உறுதி செய்த படக்குழு!

சேனாதிபதி ரிட்டர்ன் ‘இந்தியன் 3’-ஐ உறுதி செய்த படக்குழு!

0

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 3’ பட பணிகள் மீண்டும் தொடங்கி இருப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2024-ம் ஆண்டு ‘இந்தியன் 2’ படம் வெளியானது. இப்படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்தின் ட்ரெய்லர் இணைக்கப்பட்டிருந்தது.

ஆனால், ‘இந்தியன் 2’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படமும் எதிர்பாராத வெற்றியை பெறாததால் ‘இந்தியன் 3’ படம் சிக்கலைச் சந்தித்தது.

இதனிடையே படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே உண்டான சிக்கலும் இணைந்துகொள்ள, படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன.

நீண்ட நாட்களாக ‘இந்தியன் 3’ படம் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில் தற்போது படம் பற்றிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சமரசம் இல்லாத மனநிலையுடன் சேனாதிபதி திரும்பிவிட்டார். ‘இந்தியன் 3: வார் மோட்’ மூலம் அந்த மறுவருகை தொடங்குகிறது’ எனத் தெரிவித்துள்ளது.

இத்துடன் வெளியிட்டுள்ள போஸ்டரில் மூன்று வீரர்கள் புழுதியை கிளப்பியபடி வேகமாக பரந்தவெளியில் பயணிக்கிறார்கள். அவர்கள் கிளப்பிய புழுதி, நீளமான மூன்று கோடுகள் போல தெரிகிறது.

கடந்த 1996-ல் வெளியான ‘இந்தியன்’ படத்தின் மூலம் சேனாதிபதியின் பயணம் தொடங்கியது. இதன் இரண்டாவது பாகமாக  ‘இந்தியன் 2’ படம் 2024-ம் ஆண்டு வெளியானது. 

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இந்தியன் 3’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.     

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version