பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில், ”ஆயிரம் ஆண்டுக்கு முன் 1026 ஜனவரியில் சோமநாதர் கோயில் முதல் தாக்குதலை எதிர்கொண்டது.
1026-ம் ஆண்டு தாக்குதலும், அதன்பின் நடைபெற்ற தாக்குதல்களும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை குறைக்கவோ, சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டியெழுப்பிய உணர்வை உடைக்கவோ முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
இக்கோயில் வளாகத்தில் சுயமரியாதை விழா 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதி நாள் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.





