சென்னை மாவட்ட சப்-ஜூனியர் கால்பந்து அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு

0
133

சென்னை மாவட்ட சப்-ஜூனியர் ஆடவர் அணிக்கான வீரர்கள் தேர்வு வரும் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சென்னை பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோ உயர்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. இதேபோன்று சென்னை மாவட்ட சப்-ஜூனியர் மகளிர் அணிக்கான வீராங்னைகள் தேர்வு வரும் 4 மற்றும் 5-ம் தேதிகளில் பெரியமேட்டில் உள்ள கண்ணப்பர் திடலில் நடைபெறுகிறது.

இதில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டு பிறந்தவர்கள் கலந்து கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்பவர்கள் பிறப்பு சான்றிதழ். ஆதார் அட்டை, இருப்பிட சான்று ஆகியவற்றை நேரில் கொண்டு செல்ல வேண்டும்.

இதில் தேர்வு செய்யப்படுவர்கள் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் பங்கேற்பார்கள். இந்தத் தொடரின் வாயிலாக வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சப்-ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here