சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘சேயோன்’ படத்தை ‘தாய் கிழவி’யை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார்.
இதை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், டர்மரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன், ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். பாக்ய போர்ஸ் நாயகியாக நடிக்கும் இதில் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி வில்லனாக நடிக்கிறார்.
மதுரை பின்னணியைக் கொண்ட கிராமத்துக் கதையான இதன் 2-வது கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்காகப் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதில் நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் விக்னேஷ் சிவனின்’ ‘எல்ஐகே’ படத்தில் நடித்திருந்தார்.
