வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: டிஜிபியிடம் விக்கிரமராஜா மனு

0
76

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலை நேற்று, அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அந்த கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இரவுநேரக் கடைகள் இடையூறு இன்றி செயல்பட அனுமதிக்க வேண்டும். வணிகர்கள் மீதான காவல் துறை அத்துமீறல்களை தடுக்க வேண்டும். மேலும் வணிகர்கள் மீதான கொலை, கொள்ளை சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக வணிகர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அபராதம், கைது நடவடிக்கை போன்றவற்றை தடுக்க வேண்டும். வணிகர்கள் மீதான அரசு அதிகாரிகளின் அத்துமீறல்களை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, பேரமைப்பின் மாநிலப் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here