புத்த மதத்துக்கு மாறினால் எஸ்சி சான்றிதழ் தர வேண்டும்: கர்நாடக அரசு உத்தரவு 

0
14

கர்​நாடக அரசின் சமூக நலத்​துறை நேற்று பிறப்​பித்த உத்​தர​வில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: கர்​நாட​கா​வில் பட்​டியல் வகுப்​பில் 101 பிரி​வினர் உள்​ளனர். இதில் எந்த பிரிவை சேர்ந்​தவர், புத்த மதத்​துக்கு மாறி​யிருந்​தா​லும், அவர்​களுக்கு உடனடி​யாக எஸ்சி சாதிச் சான்​றிதழ் வழங்​கப்பட வேண்​டும்.

கர்​நாடக பட்​டியல் சாதி​யினர், ப‌ழங்​குடி​யினர் மற்​றும் இதர பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினருக்​கான இட ஒதுக்​கீடு சட்ட விதி​கள் இதனை ஏற்​கெனவே உறுதி செய்​திருக்​கிறது.

கடந்த 1990-ல் மத்​திய அரசு வெளி​யிட்ட அரசாணை​யிலும், கர்​நாடக அரசு 2013-ல் வெளி​யிட்ட சுற்​றறிக்​கை​யிலும் இந்த விஷ​யம் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. கடந்த 2016-ல் மத்​திய அரசு, அனைத்து மாநிலங்​களின் தலை​மைச் செய​லா​ளர்​களிட​மும் புத்த மதத்​தின​ராக மாறிய பட்​டியலினத்​தவர் எஸ்சி சாதிச் சான்​றிதழ்​களைப் பெறு​வதை உறுதி செய்​யு​மாறு கேட்​டுக் கொண்​டது.

எனவே கல்​வி, வேலை​வாய்ப்பு தேவைக்​காக புத்த மதத்​துக்கு மாறிய பட்​டியலினத்​தவருக்கு எஸ்சி சாதிச் சான்​றிதழ் வழங்​கு​வது கட்​டாய​மாகிறது. இந்த உத்​தரவை அரசின் அனைத்​துத் துறை​கள், வாரி​யங்​கள் மற்​றும் நிறு​வனங்​கள் உடனடி​யாக பின்​பற்றி செயல்பட வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here