Home விளையாட்டு செய்திகள் சாத்விக் – சிராக் ஜோடி அரை இறுதிக்கு தகுதி

சாத்விக் – சிராக் ஜோடி அரை இறுதிக்கு தகுதி

0

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாத்விக் சாய்​ராஜ் ரங்கா ரெட்​டி, சிராக் ஷெட்டி ஜோடி அரை இறு​திக்கு முன்​னேறி​யுள்​ளது.

சிங்​கப்​பூரில் சிங்​கப்​பூர் ஓபன் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது. இதில் நேற்று நடை​பெற்ற ஆடவர் இரட்​டையர் கால் இறு​தி​யில் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி 19-21, 21-17, 21-3 என்ற செட் கணக்​கில் மலேசி​யா​வின் காங் காய் ஜிங்​-ஆரோன்டை ஜோடியை வீழ்த்​தி​யது.இதன்​மூலம் அரை இறு​திக்​குச் சுற்​றுக்கு சாத்விக், சிராக் ஜோடி முன்​னேறி​யுள்​ளது.

சிந்து தோல்வி

மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறு​தி​யில் இந்​திய வீராங்​கனை பி.வி.சிந்து தோல்வி கண்டு வெளி​யேறி​னார். நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறு​திப் போட்​டி​யில் பி.​வி. சிந்துவும், கொரிய வீராங்​கனை ஆன் சே யங்​குடன் மோதி​னார்.

இந்த ஆட்டத்தில் கொரிய வீராங்கனை மிகச்சிறப்பாக விளையாடி புள்ளிகளை சேர்த்தார். இறுதியில் ஆன் சே யங் 21-17 21-14 என்ற புள்​ளி​கள் கணக்​கில் சிந்​துவை வீழ்த்​தி​னார். ஒலிம்​பிக் போட்​டிகளில் 2 பதக்​கம் வென்​றவ​ரான சிந்​து, கால் இறு​தி​யில் தோல்வி கண்டு அங்கு கூடி​யிருந்த ரசிகர்​களை ஏமாற்​றி​னார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version