Home விளையாட்டு செய்திகள் நியூஸி. தொடரிலிருந்து ஒதுக்கப்பட்ட சர்பராஸ் கான் – பேட் மூலம் பதிலடி!

நியூஸி. தொடரிலிருந்து ஒதுக்கப்பட்ட சர்பராஸ் கான் – பேட் மூலம் பதிலடி!

0

பிலாஸ்பூரில் நடைபெறும் ரஞ்சி கோப்பை டி பிரிவு ஆட்டத்தில் இமாச்சல அணிக்கு எதிராக இந்திய டெஸ்ட் அணியிலிருந்து காரணமின்றி நீக்கப்பட்டு, இன்று வரை கிரிக்கெட் அல்லாத புறக்காரணங்களினால் அணித்தேர்வுக்குப் பரிசீலிக்கப்படாத சர்பராஸ் கான் 154 ரன்களைக் குவித்தார்.

228 பந்துகளைச் சந்தித்த சர்பராஸ் கான் 19 பவுண்டரிகளுடன் 154 ரன்களைக் குவித்தார்.

முதல் நாளில் இமாச்சலப் பிரதேசத்தை 140 ரன்களுக்கு மும்பை அணி சுருட்டியிருந்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மும்பை, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 123 ஓவர்களில் 398 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இதன் மூலம் மும்பை அணி 258 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் சற்று முன் வரை மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 528 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

மற்றொரு மும்பை வீரர் ஆகாஷ் ஆனந்த் சதம் எடுத்து ஆடி வருகிறார். இன்று காலை சர்பராஸ் கான் ஜிதேந்தர் ராணாவின் பவ்வுலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆரம்பத்தில் ஆடுகளத்தில் கிடைத்த கூடுதல் பவுன்ஸை சமாளித்து நிதானமாக விளையாடிய சர்பராஸ், ஆட்டம் செல்லச் செல்ல தனது ஷாட்களை விரிவுபடுத்தினார்.

மோசமான பந்துகளை பவுண்டரிகளாக மாற்றிய அவர், எந்த அவசரமும் இல்லாமல் தனது சதத்தை எட்டினார். சதத்தை அடைந்ததும் பேட்டையும் ஹெல்மெட்டையும் உயர்த்தி ரசிகர்களின் பாராட்டை ஏற்றுக்கொண்ட அவர், பின்னர் ஒரு முழங்காலில் அமர்ந்து அந்த தருணத்தை அமைதியாக ரசித்தார்.

மும்பை கேப்டன் சித்தேஷ் லாட் 188 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். அவருடன் சர்பராஸ் நான்காவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தார்.

அதற்கு முன் முஷீர் கான் 137 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்தார். முஷீர் ஆட்டமிழந்த பிறகு, சர்பராஸ் மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்டர் ஆகாஷ் ஆனந்த் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 210 ரன்களைச் சேர்த்தனர்.

சர்பராஸ் கான் இப்போதைய நிர்வாகக் குழு பிசிசிஐ-யில் நீடிக்கும் வரை வாய்ப்பு கிடைக்காது என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version