சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு மனு

0
7

மதுரை: தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​ குளத்​தைச் சேர்ந்​தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். இவர்​கள் சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர். 2020 ஜூன் மாதம் கரோனா தொற்று பரவல் நேரத்​தில் ஊரடங்கு கட்​டுப்​பாட்டு நேரம் தாண்டி கடையைத் திறந்து வைத்​த​தாகக் கூறி இரு​வரை​யும் விசா​ரணைக்​காக போலீ​ஸார் காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றனர். அங்கு இரு​வரை​யும் போலீ​ஸார் கடுமை​யாக தாக்​கி​யுள்​ளனர். இதில் இரு​வரும் உயி​ரிழந்​தனர்.

இந்​தச் சம்​பவம் தொடர்​பாக சாத்​தான்​குளம் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு​கணேஷ் மற்​றும் சிறப்பு சார்பு ஆய்​வாளர், காவலர்​கள் என மொத்​தம் 9 பேரை சிபிஐ கைது செய்​தது. மதுரை மத்​திய சிறை​யில் அவர்​கள் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த வழக்கு மதுரை முதலா​வது கூடு​தல் நீதி​மன்​றத்​தில் விசா​ரிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில் உயி​ரிழந்த ஜெய​ராஜின் மனைவி ஜெய​ராணி, இந்த வழக்கு விசா​ரணையை விரை​வில் முடிக்க உத்​தர​விடக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார். இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் 6 மாதத்​தில் விசா​ரணையை முடிக்க விசா​ரணை நீதி​மன்​றத்​துக்கு உத்​தர​விட்​டது.

அதன்​படி விசா​ரணை நடை​பெற்று வந்த நிலை​யில், விசா​ரணையை முடிக்க மேலும் 6 மாதம் காலஅவ​காசம் கேட்டு விசா​ரணை நீதி​மன்​றம் சார்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை நீதிபதி கே.​முரளிசங்​கர் விசா​ரித்​தார். பின்​னர், சிபிஐ தரப்​பில் பதில் மனு தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டு, விசா​ரணையை நீதிபதி தள்​ளி​வைத்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here