சந்தோஷ் டிராபி கால்பந்து: கால் இறுதிச் சுற்றில் தமிழ்நாடு அணி

0
49

சந்​தோஷ் டிராபி கால்பந்து போட்​டி​யின் கால் இறு​திச் சுற்​றில் விளை​யாட தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்​ளது. அசாம் மாநிலம் டகு​கானா மற்​றும் சிலப்பதரில் சந்​தோஷ் டிராபி கால்​பந்து தொடரின் இறுதிக்கட்ட சுற்று நடை​பெற்று வரு​கிறது.

இதில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு அணி நேற்று உத்​த​ராகண்ட் அணி​யுடன் சிலப்​ப​தர் கால்​பந்து மைதானத்​தில் மோதி​யது. இதில் தமிழ்​நாடு அணி 1-0 என்ற கோல் கணக்​கில் உத்​த​ராகண்ட் அணியை வீழ்த்தி கால் இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளது.

தமிழ்​நாடு அணி வீரர் முமாசங்​கர் 68-வது நிமிடத்​தில் ஒரு கோல் அடித்​தார். அந்த கோலே அணி​யின் வெற்றி கோலாக மாறியுள்​ளது. இதன்​மூலம் ஏ பிரி​வில் தமிழ்​நாடு அணி 10 புள்​ளி​களு​டன் 2-ம் இடம் ​பிடித்து கால் இறு​திச் சுற்றை எட்​டி​யுள்​ளது. இதே ஏ பிரி​வில் மேற்கு வங்க அணி 11 புள்​ளி​களைப் பெற்று கால் இறு​திக்கு முன்​னேறி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here