97 ரன்கள் விளாசி சஞ்சு சாம்சன் அசத்தல்: அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேறியது எப்படி?

0
18

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சூப்​பர் 8 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்திய அணி, இரு முறை சாம்​பிய​னான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யுடன் நேற்று மோதி​யது. கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் டாஸ் வென்ற இந்​திய அணி​யின் கேப்டன் சூர்​யகு​மார் யாதவ் பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.

இதையடுத்து மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதலில் பேட் செய்​தது. கேப்​டன் ஷாய் ஹோப்​புடன், ராஸ்​டன் சேஸ் தொடக்க வீர​ராக களமிறங்​கி​னார். அர்​ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரில் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்​பித்த ராஸ்​டன் சேஸ் தொடர்ச்​சி​யாக 2 பவுண்​டரி​களை விரட்டி அசத்தினார்.

ஜஸ்​பிரீத் பும்ரா வீசிய 5-வது ஓவரின் 5-வது பந்தை ராஸ்டன் சேஸ் ஸ்கூப் ஷாட்​டில் பவுண்​டரி அடித்​தார். அடுத்த பந்தை அவர், கவர் திசை​யில் தூக்கி அடித்த போது எளி​தான கேட்ச்சை அபிஷேக் சர்மா தவற​விட்​டார். பவர்​பிளே​வில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி விக்​கெட் இழப்​பின்றி 45 ரன்​கள் சேர்த்​தது.

சீராக ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை வருண் சக்​ர​வர்த்தி பிரித்​தார். ஷாய் ஹோப் 33 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​கள் எடுத்த நிலை​யில் வருண் சக்​ர​வர்த்தி பந்​தில் போல்​டா​னார். முதல் விக்​கெட்​டுக்கு ஷாய் ஹோப், ராஸ்​டன் சேஸ் ஜோடி 8.5 ஓவர்​களில் 68 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஷிம்​ரன் ஹெட்மயர் மட்​டையை சுழற்​றி​னார்.

ஹர்​திக் பாண்​டியா வீசிய 10-வது ஓவரில் ஷிம்​ரன் ஹட்மயர் சிக்​ஸர் ஒன்றை பறக்​க​விட்​டார். தொடர்ந்து வருண் சக்​ர​வர்த்தி வீசிய அடுத்த ஓவரில் தலா ஒரு சிக்ஸர், பவுண்​டரியை விரட்ட இந்த ஓவரில் 17 ரன்​கள் குவிக்​கப்​பட்​டன. 12-வது ஓவரை வீசிய ஜஸ்​பிரீத் பும்ரா 2 விக்​கெட்​களை வீழ்த்தி திருப்​பு​முனையை ஏற்​படுத்​திக் கொடுத்​தார்.

அதிரடி​யாக விளை​யாடிய ஷிம்​ரன் ஹெட்​மயர் 12 பந்துகளில், 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 27 ரன்​கள் எடுத்த நிலை​யில் பும்ரா பந்​தில் விக்​கெட் கீப்​பர் சஞ்சு சாம்​சனிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். இதைத் தொடர்ந்து ராஸ்​டன் சேஸ் 25 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 40 ரன்​கள் விளாசிய நிலை​யில் பும்ரா பந்​தில் கவர் திசை​யில் நின்ற சூர்​யகு​மார் யாத​விடம் பிடிகொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

12 ஓவர்​களின் முடி​வில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 103 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஷெர்​பேன் ரூதர்​போர்டு 9 பந்துகளில், 14 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஹர்​திக் பாண்டியா பந்​தில் சஞ்சு சாம்​சனிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்​டி​னார். இதன் பின்​னர் ரோவ்​மன் பவல், ஜேசன் ஹோல்​டர் ஜோடி தாக்​குதல் ஆட்​டம் மேற்கொண்டது.

ஹர்​திக் பாண்​டியா வீசிய 15-வது ஓவரின் கடைசி பந்தை ஜேசன் ஹோல்​டர் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார். அர்​ஷ்தீப் சிங் வீசிய 16-வது ஓவரில் ரோவ்​மன் பவல் 2 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரியை விரட்ட இந்த ஓவரில் மட்​டும் 24 ரன்​கள் குவிக்​கப்​பட்​டன.

வருண் சக்​ர​வர்த்தி வீசிய 17-வது ஓவரில் ஜேசன் ஹோல்​டர் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரியை விரட்ட 14 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. பும்ரா வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்​டரி​களு​டன் 12 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. அர்​ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவரின் 3-வது பந்​தில் ரோவ்​மன் பவல் டீப் மிட்விக்​கெட் திசை​யில் கொடுத்த கேட்சை அபிஷேக் சர்மா தவற​விட்​டார்.

இந்த ஓவரில் அர்​ஷ்தீப் சிங் 6 ரன்​களை மட்​டுமே வழங்​கி​னார். ஜஸ்​பிரீத் பும்ரா வீசிய கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்​டர் ஒரு சிக்​ஸரை​யும், ரோவ்​மன் பவல் ஒரு பவுண்​டரியை​யும் விரட்ட 14 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. 20 ஓவர்​களின் முடி​வில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 195 ரன்​கள் குவித்​தது.

ரோவ்​மன் பவல் 19 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 34 ரன்​களும் ஜேசன் ஹோல்​டர் 22 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 37 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். கடைசி 5 ஓவர்​களில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 70 ரன்​களை குவித்து மிரட்​டியது. இந்​திய அணி சார்​பில் ஜஸ்​பிரீத் பும்ரா 4 ஓவர்​களை வீசி 36 ரன்​களை வழங்கி 2 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

வருண் சக்​ர​வர்த்தி 4 ஓவர்​களை வீசி 40 ரன்​களை விட்​டுக்​கொடுத்து ஒரு விக்​கெட்​டை​யும், ஹர்​திக் பாண்​டியா 4 ஓவர்​களை வீசி 40 ரன்​களை வழங்கி ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். அர்​ஷ்தீப் சிங் வீசிய 4 ஓவர்​களில் 43 ரன்​களும், அக்​சர் படேல் வீசிய 4 ஓவர்​களில் 35 ரன்​களும் விளாசப்​பட்​டன.

இதையடுத்து 196 ரன்​கள் இலக்​குடன் இந்​திய அணி பேட் செய்​தது. அபிஷேக் சர்மா 11 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டுன் 10 ரன்​கள் எடுத்த நிலை​யில் அகீல் ஹோசைன் பந்தை சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது லெக் திசை​யில் ஷிம்​ரன் ஹெட்​மயரிடம் கேட்ச் ஆனது.

இதையடுத்து களமிறங்​கிய இஷான் கிஷன் 6 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 10 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜேசன் ஹோல்​டர் வீசிய பவுன்​சரை டீப் ஸ்கொயர் லெக் திசை​யில் விளாசிய போது எல்​லைக் கோட்​டுக்கு அருகே ஷிம்​ரன் ஹெட்​மயரிடம் கேட்ச் ஆனது.

4.3 ஓவர்​களில் 41 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ், சஞ்சு சாம்​சனுடன் இணைந்து பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​தார். பவர்​பிளே​வில் இந்​திய அணி 53 ரன்​கள் சேர்த்​தது. ஜேசன் ஹோல்​டர் வீசிய 7-வது ஓவரில் சஞ்சு சாம்​சன் பவுண்​டரி​யும் சூர்​யகு​மார் யாதவ் சிக்​ஸரும் விளாசினர்.

இந்த ஓவரில் 14 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. சீராக ரன்​கள் சேர்த்த சஞ்சு சாம்​சன் 26 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் அரை சதம் அடித்​தார். நிதான​மாக விளை​யாடிய சூர்​யகு​மார் யாதவ் 16 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷமர் ஜோசப் பந்தை டீப் பாயிண்ட் திசை​யில் விளாசிய போது ஷேர்​பேன் ரூதர்​போர்​டிடம் கேட்ச் ஆனது.

அப்​போது ஸ்கோர் 10.2 ஓவர்​களில் 99 ஆக இருந்​தது. 3-வது விக்​கெட்​டுக்கு சூர்​யகு​மார் யாதவ், சஞ்சு சாம்​சன் ஜோடி 58 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து திலக் வர்மா களமிறங்​கி​னார். கடைசி 8 ஓவர்​களில் இந்​திய அணி​யின் வெற்​றிக்கு 92 ரன்​கள் தேவை​யாக இருந்​தன.

ஷமர் ஜோசப் வீசிய 13-வது ஓவரின் முதல் பந்​தில் சஞ்சு சாம்​சன் பவுண்​டரி விரட்ட திலக் வர்மா தொடர்ச்​சி​யாக 3 பவுண்​டரி​கள் அடித்து அசத்​தி​னார். இந்த ஓவரில் 17 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. ராஸ்​டன் சேஸ் வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்​சன் பவுண்​டரி அடிக்க கடைசி பந்தை திலக் வர்மா சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார். இதன் வாயி​லாக இந்த ஓவரில் 15 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன.

இந்த கூட்​ட​ணி​யின் அதிரடி​யால் கடைசி 6 ஓவர்​களில் வெற்​றிக்கு 60 ரன்​கள் தேவை என்ற நிலை உரு​வானது. ஜேசன் ஹோல்​டர் வீசிய 15-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய திலக் வர்மா அடுத்த பந்தை மிட் ஆஃப் திசை​யில் அடித்த போது ஷிம்​ரன் ஹெட்​மயரின் அற்​புத​மான கேட்ச் காரண​மாக ஆட்​ட​மிழந்​தார். 15 பந்​துகளை சந்​தித்த திலக் வர்மா ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​கள் சேர்த்​தார்.

இதையடுத்து ஹர்​திக் பாண்​டியா களமிறங்​கி​னார். இதே ஓவரின் கடைசி பந்தை சஞ்சு சாம்​சன் பவுண்​டரிக்கு விரட்​டி​னார். இந்த ஓவரில் 10 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது- ஷமர் ஜோசப் வீசிய 16-வது ஓவரில் ஹர்​திக் பாண்​டி​யா, சஞ்சு சாம்​சன் ஆகியோர் தலா ஒரு பவுண்​டரி அடிக்க 14 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது.

கடைசி 4 ஓவர்​களில் 36 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் ரோமாரியோ ஷெப்​பர்டு வீசிய 17-வது ஓவரின் 2-வது பந்தை ஹர்​திக் பாண்​டியா கவர் திசை​யில் கொடுத்த கேட்ச்சை ஜேசன் ஹோல்​டர் தவற​விட்​டார். இந்த ஓவரில் ஒரு பவுண்​டரி​யுடன் 11 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. 18 பந்​துகளில் 25 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் ஜேசன் ஹோல்​டர் வீசிய 18-வது ஓவரில் 8 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​தார்.

கடைசி 2 ஓவர்​களில் இந்​திய அணி​யின் வெற்​றிக்கு 17 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. முதல் பந்தை வீணடித்த ஹர்​திக் பாண்​டியா அடுத்த பந்​தில் எக்​ஸ்​டிரா கவர் திசை​யில் நின்ற ஜேசன் ஹோல்​டரிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதனால் ஆட்​டத்​தில் பரபரப்பு அதி​க​மானது. 14 பந்​துகளை சந்​தித்த ஹர்​திக் பாண்​டியா 2 பவுண்​டரி​களு​டன் 17 ரன்​கள் சேர்த்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய ஷிவம் துபே சந்​தித்த முதல் பந்​தில் பவுண்​டரி அடித்​தார். 4-வது பந்​தில் ரன் சேர்க்​கப்​ப​டாத நிலை​யில் 5-வது பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய ஷிவம் துபே, கடைசி பந்​தில் 2 ரன்​கள் சேர்த்​தார். இதனால் இந்த ஓவரில் 10 ரன்​கள் சேர்க்​கப்​பட ஆட்​டம் இந்​திய அணி​யின் கட்​டுப்​பாட்​டுக்​குள் முழு​மை​யாக வந்​தது. ரோமாரியோ ஷெப்​பர்டு வீசிய கடைசி ஓவரில் 7 ரன்​கள் தேவை​யாக இருந்த நிலை​யில் முதல் பந்தை சஞ்சு சாம்​சன் லெக் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார்.

அடுத்த பந்தை மிட் ஆன் திசை​யில் சஞ்சு சாம்​சன் பவுண்​டரி விளாச இந்​திய அணி 19.2 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 199 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. சஞ்சு சாம்​சன் 50 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் 97 ரன்​களும், ஷிவம் துபே 4 பந்​துகளில், 8 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி குரூப் 1-ல் 4 புள்​ளி​களு​டன் 2-வது இடம் பிடித்து அரை இறு​திக்கு முன்​னேறியது. வரும் 5-ம் தேதி மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் 2-வது அரை இறு​தி ஆடத்​தில்​ இந்​தி​ய அணி, இங்​கிலாந்​துடன்​ பலப்​பரீட்​சை நடத்​துகிறது.

சிக்ஸர்கள் வேட்டை

டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு பதிப்பில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை மேற்கு இந்தியத் தீவுகளின் ஷிம்ரன் ஹெட்மயர் படைத்தார். இந்தியாவுக்கு எதிராக நேற்று அவர், 2 சிக்ஸர்கள் அடித்தார். இதன் மூலம் அவர், நடப்பு தொடரில் 19 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் சாஹிப்சதா பர்ஹான் நடப்பு தொடரில் 18 சிக்ஸர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து தற்போது புதிய சாதனை படைத்துள்ளார் ஷிம்ரன் ஹெட்மயர்.

ரன் அவுட்டை தவறவிட்ட வருண்

அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 2-வது பந்தில் ராஸ்டன் சேஸை ரன் அவுட் செய்ய கிடைத்த எளிதான வாய்ப்பை வருண் சக்ரவர்த்தி கோட்டைவிட்டார். ராஸ்டன் சேஸ் கவர் திசையில் அடித்த பந்து வருண் சக்ரவர்த்தியிடம் சென்றது. அதற்குள் ராஸ்டன் சேஸ் ரன் ஓடுவதற்காக பாதி தூரம் வந்துவிட்டார். மறுமுனையில் ஷாய் ஹோப் ரன் ஓட ஆயத்தமான நிலையில் நின்றுவிட்டார்.

இதை சுதாரிக்கத் தவறிய வருண் சக்ரவர்த்தி பந்தை விக்கெட் கீப்பருக்கு த்ரோ செய்யாமல் நான்-ஸ்டிரைக்கர் திசையை நோக்கி எறிந்தார். ஆனால் அது ஷாய் ஹோப் மீது பட்டு விலகிச் சென்றது. ஒரு ரன்னில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்த ராஸ்டன் சேஸ் 25 பந்துகளில் 40 ரன்கள் விளாசி மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு பலம் சேர்த்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here