Home விளையாட்டு செய்திகள் “சஞ்சு சாம்சன் வந்துவிட்டார்… தோனி ஓய்வு பெற இதுவே சரியான நேரம்” – ஆகாஷ் சோப்ரா

“சஞ்சு சாம்சன் வந்துவிட்டார்… தோனி ஓய்வு பெற இதுவே சரியான நேரம்” – ஆகாஷ் சோப்ரா

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை அவரது ஒவ்வொரு பட ரீலீசின் போதும் பெரிதாகப் பேசி வந்துள்ளது தமிழ்ச்சமூகம். அதே போல்தான் இப்போது ஒவ்வொரு ஐபிஎல் சீசன் தொடக்கத்தின் போதும் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடர் என்பார்கள் ஆனால் அவர் எதுவும் சொல்லாமல் போய் விடுவார், மீண்டும் அடுத்த சீசன்.. இப்படியேதான் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த முறை சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு வந்த பிறகே இதுதான் தோனியின் கடைசி சீசன் என்று பேசத்தொடங்கியுள்ளார்கள். அந்த வரிசையில் முதலில் கருத்து கந்தசாமியாகி நீண்ட காலமான ஆகாஷ் சோப்ரா தோனி ரிட்டையர்மெண்ட் பற்றி தன் ஊகத்தைக் கருத்தாக வெளியிட்டுள்ளார்:

ஜியோ ஸ்டார் ஐபிஎல் டுடே லைவ் நிகழ்ச்சியில் பேசிய ஆகாஷ் சோப்ரா கூறியதாவது: “ஓய்வறையிலிருந்து அணியை வழி நடத்த முடியாது. கால்பந்தாட்டத்தில் மேனேஜர்கள் வெளியே இருந்த படியே ஆட்டத்தை நடத்துவது போல் இங்கு செய்ய முடியாது. தோனியின் மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆட்டம் பற்றிய அவரது நுணுக்கமான பார்வை, இதுதான் தோனியை மற்ற வீரர்களிடமிருந்து பிரித்துப் பார்க்க வைக்கும் விஷயம்.

எப்படியிருந்தாலும் 2026 ஐபிஎல் அவருக்குக் கடைசி தொடர் என்று கருதுகிறேன். அவரது வாரிசு இப்போது வந்து விட்டார், அதான் சஞ்சு சாம்சன். இந்த சீசனிலேயே சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என்றே கருதுகிறேன். இது தோனியின் உடல்தகுதி அவரது முழங்கால் வலி ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

ஆனால் ஒன்றை உறுதியாகக் கூறுகிறேன், ‘இம்பாக்ட் பிளேயர்’ என்ற ஹோதாவில் அவர் அணியில் இருக்கத் தேவையில்லை. இல்லை அப்படித்தான் அவர் இம்பாக்ட் பிளேயராகத்தான் ஆடுவார் என்றால் அவர் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம்.” என்றார். தோனி இதுவரை 278 ஐபிஎல் போட்டிகளில் 5,439 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த 6வது வீரராகத் திகழ்கிறார் தோனி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version