இந்தி நடிகர் சல்மான் கான் தீவிரவாதியாம் என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் சல்மான் கான், ஷாருக் கான், அமீர் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சல்மான் கான் பேசும்போது, “இப்போது, இந்தி திரைப்படத்தை இங்கு வெளியிட்டால் அது சூப்பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படம் வெளியிட்டாலும் பல நூறு கோடி வசூலாகும். ஏனென்றால், இங்கு பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என பல நாட்டு மக்கள் பணி புரிகிறார்கள்’’ என்றார்.
பாகிஸ்தானின் ஒரு பகுதிதான் பலுசிஸ்தான். ஆனால், சல்மான் கான் பேசும்போது, பலுசிஸ்தான் ஒரு நாடு என்பது போல தனியாக குறிப்பிட்டார். இது பலுசிஸ்தான் மக்களின் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பது போல உள்ளது. இது பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தான் அரசு கடந்த 16-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் சல்மான் கான் பலுசிஸ்தான் பிரிவினையை ஆதரிக்கிறார். எனவே, அவர் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் (1997) 4-வது அட்டவணையின் கீழ் கண்காணிக்கப்படும் நபராக அறிவிக்கப்படுகிறார்’’ என கூறப்பட்டுள்ளது.














